7th Pay Commission: விரைவில் 50% டிஏ, அதன் பிறகு 8வது ஊதியக்குழு... மொத்தத்தில் பண மழை!!

7th Pay Commission: ரயில்வே மூத்த குடிமக்கள் நலச் சங்கம் (RSCWS) சமீபத்தில் 8வது ஊதியக் குழுவை ஜனவரி 1, 2024 முதல் அமல்படுத்துமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியது. அடுத்த ஆண்டு அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் 50%க்கு மேல் உயரும் என்பது அவர்களது வாதமாக உள்ளது.

 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய ஊதியக் குழு தேவை என்பதற்கான காரணங்களை RSCWS நிதியமைச்சகத்திற்கு அனுப்பிய குறிப்பில் விளக்கியுள்ளது.

 

1 /9

மத்திய ஊதியக் குழுக்களுக்கு இடையே 10 ஆண்டு கால நீண்ட இடைவெளி இருப்பதால், கடந்த 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

2 /9

ஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000க்கு பதிலாக ரூ.18,000 என நிர்ணயித்துள்ளது என்று RSCWS கூறியது. மேலும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.15க்கு பதிலாக 2.57 என தவறாக முன்மொழியப்பட்டது. 

3 /9

முன்னதாக, 5வது மற்றும் 6வது ஊதியக் குழு, ஊதிய திருத்தத்திற்கான 10 ஆண்டு விதிமுறையிலிருந்து விலகி, டிஏ டிஆர் 50%க்கு மேல் உயரும் தேதியுடன் அதை இணைக்க பரிந்துரைத்தது.

4 /9

கடந்த மூன்று மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, எதிர்காலத்தில் DA/DR அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும். 

5 /9

ஜனவரி-2024 முதல் DA / DR விகிதம் 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழியில் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் ஜனவரி, 2024 முதல் திருத்தப்பட வேண்டும்.  

6 /9

அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்பார்த்த நிவாரணத்தை அளிக்கவில்லை என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தனிநபர் வருமானத்தின் அதிகரிப்புடன் அவை ஒத்திசைக்கவில்லை. 

7 /9

ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் ஓராண்டு அல்லது அதற்கு மேல் எடுக்கும். 

8 /9

இதுபோன்ற சூழ்நிலையில், 8வது ஊதியக்குழுவை விரைவில் துவக்கி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2019 ஜனவரி 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

9 /9

மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. எட்டாவது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி முன்னர் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 42% அகவிலைப்படியை பெறுகின்றனர். இது விரைவில் 46% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.