கேட்பரி நிறுவனம், தனது பழைய விளம்பரத்திற்கு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது. 'புதிய மொந்தையில் பழைய 'கள்' என்ற பழமொழியை உண்மைபடுத்தும் விளம்பரம் இது. தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் புதிய விளம்பரம், 90களில் வெளிவந்த பழைய விளம்பரத்தின் அதே கருவை பயன்படுத்தி பாலின சமத்துவத்தை ஆதரிக்கிறது.
 
பல தசாப்தங்களாக, கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் பிடித்தமான விளையாட்டு என்ற இடத்தை பிடித்திருக்கிறது. பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இருக்கும் பிரபலம் மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இந்த சூழ்நிலையில், கேட்பரியின் விளம்பரம் விளையாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்கான ஆவலை  வெளிப்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேட்பரி டெய்ரி மில்கின் புதிய விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது, இது 90 களில் இருந்த ஒரு விளம்பரத்தின் கருப்பொருள், பாடல் அனைத்தையும் அப்படியே வைத்துக் கொண்டு, நடிக-நடிகைகளை மட்டும் மாற்றி புதிய விளம்பரத்தை எடுத்து வெளியிட்டுள்ளது.



'புதிய மொந்தையில் பழைய 'கள்' என்ற முதுமொழி, பழமொழியாக இருந்தாலும், பழம்மொழிகள் என்றுமே நவீனத்திற்கும் ஒத்துப் போகும் என்பதை இந்த விளம்பரம் உணர்த்துகிறது.


1994 ஆம் ஆண்டில், வெளியான கேட்பரி விளம்பரத்தில் தனது காதலன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண், விளையாட்டின் சிக்கலான நேரத்தில் காதலன் சரியாக செயல்பட்டதும், மகிழ்ச்சியின் உச்சத்தில் தன்னை மறந்து, கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பாதுகாப்பைத் தாண்டி, உள்ளே குதித்து தன்னிச்சையாய் நடனம் ஆடுகிறார். பின்னணியில், வாழ்க்கையில் என்னவொரு சுவை என்ற பொருள்படும், 'கியா ஸ்வாத் ஹே ஜிந்தகி மே' என்ற பாடல் ஒலிக்கும். 


அசல் விளம்பரம் இது:  



அசல் விளம்பரம் ஒரு பெண் தன் காதலனின் கிரிக்கெட் திறமையை மெச்சியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, கேட்பரி, மிகவும் புகழ்பெற்ற அதே விளம்பரத்தை மீண்டும் கோணத்தை மாற்றி எடுத்து, தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.


பாலின சமத்துவம் என்பது முக்கியமானதாக மாறியிருக்கும் நேரத்தில் இந்த விளம்பரம், மிகவும் முக்கியமானதாக ஒன்று. ஆனால், 28 ஆண்டுகள் பழையது என்று சொல்லிவிட முடியாத அளவு அருமையாக இன்றுதான் புதிதாய் உருவாக்கப்பட்ட கருத்தைப் போல இருக்கும் மைல்கல் விளம்பரம் இது. அன்றும், இன்றும், என்றென்றும் ஒத்துப் போகக்கூடிய அருமையான விளம்பரம்.
 
2021 ரீமேக்கில் ஒரு பெண் வெற்றி ரன் அடிக்கும் போது, ஒரு ஆண் அவளை உற்சாகப்படுத்துகிறார். அசல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு கால் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த முறை, ஆடவர் கிரிக்கெட்டுக்கு பதிலாக, பெண்கள் கிரிக்கெட் போட்டி என களத்தை மட்டுமே மாற்றிய இந்த விளம்பரம் காலத்துக்கு ஏற்ற ஒன்று என அனைவராலும் பாராட்டப்படுகிறது.


Also Read | IPL மீண்டும் இன்று முதல்


தற்போது, காதலி வெற்றிக்கான சிக்ஸரை அடித்தபோது, அசல் விளம்பரத்தைப் போலவே அதை கொண்டாடுகிறார் ரசிகக் காதலர். மைதானத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்து களத்தில் கேட்பரியை காதலிக்கும் கொடுத்து ரசிக்கிறார் கேட்பரி காதலன்..


பல தசாப்தங்களாக, கிரிக்கெட் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் ஏற்பட வேண்டிய முக்கியமான மாற்றத்தை இந்த விளம்பரம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. 


மிகவும் தேவையான புதிய திருப்பத்திற்குப் பின்னால் உள்ள சிந்தனையைப் பாராட்டும் நெட்டிசன்கள், தங்கள் கருத்துக்களையும் வெளியிடுகின்றனர். விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.



ஒரு பயனர் இவ்வாறு எழுதுகிறார்: "மிகவும் அவசியமான திருப்பம் ... நன்றாக செய்யப்பட்டது @DairyMilkIn .... இது குழந்தைப் பருவத்தின் பல நினைவுகளைக் கொண்டுவருகிறது.. பெண்களுக்கான களத்தின் அவசியத்தை உணர்த்துகிறது!".


"இந்தியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளம்பரங்களில் ஒன்றின் ரீமேக். இந்த ரோல் ரிவர்சல் விளம்பரத்தின் மூலம், இந்திய சமுதாயத்தில் பெண்கள் எவ்வளவு முன்னேறியுள்ளனர் என்பது தெரிகிறது. அதே சமயம், பெண்களை மதிக்கும் தலைமுறையாக இந்த தசாப்த இளைஞர்கள் மாறியிருப்பதையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது விளம்பரம். வெற்றி மற்றும் வெற்றியின் உணர்ச்சிகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றன."


மகளிர் விளையாட்டு வீரர்கள் முக்கிய மைல்கற்களை அடைவதில் எப்போதும் முன்னணியில் உள்ளனர், ஆனால் அரிதாகவே அங்கீகரிக்கப்படுகிறார்கள். அவர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை ஒப்புக்கொள்வதற்கு இதுபோன்ற சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்வது பென்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்,


மேலும் மேலும் சாதிக்க உத்வேகம் கொடுக்கும் இந்த விளம்பரம், பாலின சமத்துவம் என்ற பாதையில் உலகம் செல்ல வேண்டிய பாதையை உணர்த்துகிறது. கேட்பரியின் இந்த விளம்பரம், தனது தயாரிப்பை விற்பனை செய்வது என்பதையும் தாண்டி, சமூக அக்கறையை காட்டுகிறது.


ALSO READ | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR