புதுடெல்லி: IPL பட்டத்தை வெல்வது யார்? ஐபிஎல் போட்டிகளுக்கான காத்திருப்புத் தருணங்கள் விரைவில் முடிவடையப் போகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐபிஎல் 2021 போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன. எனவே, அதை முதல் கட்டப் போட்டிகள் என்று குறிப்பிடுகிறோம். இடைநிறுத்தப்பட்ட போட்டிகள் மீண்டும் இப்போது இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரவிருக்கிறது.
ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செப்டம்பர் 19) மாலை தொடங்குகிறது. எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுடன் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டித்தொடர் தொடங்குகிறது.
விராட் கோலி எப்போது களம் இறங்குகிறார்?
விராட் கோலியின் அணி ஆர்சிபி (RCB) அணி நாளை செப்டம்பர் 20 அன்று அபுதாபியில் களம் இறங்குகிறது. ஈயின் மோர்கனின் (Eoin Morgan) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியை ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது, டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) செப்டம்பர் 22 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (Sunrisers Hyderabad) அணியை எதிர்கொள்கிறது.
Also Read | சென்னை தொடக்க வீரருக்கு காயம் அவர் விளையாடுவதில் சிக்கல்
அக்டோபர் 15 அன்று இறுதிப் போட்டிகள் நடைபெறும்
ஐபிஎல் 2021 -ன் இறுதிப் போட்டி துபாயில் அக்டோபர் 15 -ம் தேதியும், முதல் தகுதிச்சுற்று போட்டி அக்டோபர் 10 -ம் தேதி துபாயிலும் நடைபெறும். எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதிப் போட்டி ஷார்ஜாவில் அக்டோபர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
புள்ளிகள் அட்டவணையில் முன்னணியில் இருப்பது யார்?
ஐபிஎல் 2021 புள்ளிகளின் பட்டியலில், டெல்லி கேபிடல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 6 பந்தயங்களில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. 10 புள்ளிகள் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. கலந்துக் கொண்ட 7 போட்டிகளில் 5 பந்தயங்களில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
READ ALSO | இந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR