திரைப்பட ஒளிப்பதிவைப் பற்றிய தொகுப்பினை உள்ளடக்கிய கேமரா கண்கள் என்னும் புத்தகத்தினை ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் எழுதியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்பட ஒளிப்பதிவைப் பற்றி தொடர்ந்து தமிழில் [அசையும் படம், பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), க்ளிக், ஒளி ஓவியம், திசை ஒளி] நூல்களை எழுதி வரும் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் சமீபத்தில் நூறு ஆண்டு கால தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு வரலாற்றை ‘கேமரா கண்கள்’ என்று நூலாக எழுதியுள்ளார்.


மெளனப் படக்காலத்திலிருந்து கருப்பு வெள்ளை, வண்ணப்படங்கள் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்கள் செய்த முக்கிய தொழில்நுட்ப முயற்சிகள், அவர்கள் பணியாற்றிய திரைப்படங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.



இப்புத்தகத்தை இயக்குநர் ஜனநாதன் மற்றும் ஒளிப்பதிவாளர் B.கண்ணன் ஆகியோர் 41-வது சென்னை புத்தகக் காட்சியில் வெளியிட்டனர். சமீபத்தில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் அதன் தலைவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.