இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது; வெறும் கண்களால் பார்க்கலாம்
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது. சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். வெறும் கண்களால் பார்க்கலாம். இது கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது.
புது டெல்லி: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது. நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவே பூமி மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 10.36 மணிக்கு தொடங்கிய இந்த சந்திர கிரகணம், அடுத்த நாள் (ஜனவரி 11) அதிகாலை 2.44 மணிக்கு நிறைவடைய உள்ளது. இன்று நடைபெற்ற சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்காது. அதனால் தான், இன்று தோன்றியுள்ள சந்திர கிரகணம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.
தற்போது முதல் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை நாம் கான முடியும். அதாவது அதிகாலை 2.42 மணி வரை சந்திர கிரகணத்தை நம்மால் பார்க்க முடியும்.
இது முழு சந்திர கிரகணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கிரகணம் மொத்தம் 4 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணத்தை ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆபிரிக்காவில் காணலாம், அதே நேரத்தில் இந்த கிரகணத்தை வட அமெரிக்காவில் காண முடியாது. இதை அலாஸ்கா, கிழக்கு சுரங்கம் மற்றும் வட கிழக்கு கனடாவிலும் காணலாம்.
யூடியூப் சேனலில் இந்த சந்திர கிரகணத்தின் நிகழ்வின் நேரலை ஸ்ட்ரீமிங்கையும் பார்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இது கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. சந்திர கிரகணம் ஒரு வானியல் நிகழ்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதைப் பார்த்தால் கண்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை காணலாம்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.