Hallmarked Jewellery: ஜூன் 1ம் தேதி முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம்
Hallmarked Jewellery: தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக தான் தங்கத்தை அணிகலனாக மட்டுமின்றி ஒரு முதலீட்டு நோக்கிலும் வாங்கி வருகின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் பணத்திற்கு இருக்கும் மதிப்பை விட தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு அதிகம் எனலாம். தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறையாது என்ற திடமான நம்பிக்கையின் காரணமாக தான் தங்கத்தை அணிகலனாக மட்டுமின்றி ஒரு முதலீட்டு நோக்கிலும் வாங்கி வருகின்றனர்.
இந்தியாவில், குறிப்பாக, தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.
ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், கருதப்படுகிறது. அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நீங்கள் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா, இல்லை கலப்பட தங்கமா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இந்த கலப்பட சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த காரட் தங்கம் அல்லது அசுத்தமான தங்கத்தை ஹால்மார்க் இல்லாமல் விற்கும் நகைக்கடைக்காரர்கள் பலர் உள்ளனர்.
ஹால்மார்க் இல்லாத தங்கம் நகையை சந்தையில் விற்கும் போது, அதற்கு நாம் கொடுத்த விலையை விட குறைவான விலையில் விற்கப்படும் சாத்தியம் அதிகம். இதை கருத்தில் கொண்டு தற்போது அரசு ஹால்மார்க் கட்டாயம் என்ற புதிய விதியை உருவாக்கியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க | மீண்டும் குறைந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் ஹேப்பி
நாட்டின் சுமார் 256 மாவட்டங்களில், கடந்த 23 ஜூன் 2021 அன்று செயல்படுத்தப்பட்டது. இப்போது அது நடைமுறைக்கு வந்த பிறகு, ஹால்மார்க் இல்லாமல் தங்கம் விற்க தடை விதிக்கப்படும்.
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை ஏன் வாங்க வேண்டும்
ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் சுத்தமான தங்கமாக கருதப்படுகிறது. தங்கம் தூய்மையானது என்றுசான்றளிக்கப்பட்ட தங்கம் என்பதை ஹால்மார்க் குறிக்கிறது. இந்த தங்கம் குறிப்பாக ஹால்மார்க்கிங் என்று அழைக்கப்படும் தர சோதனையின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள BSI ஏஜென்சிகள் தங்கத்தின் தூய்மைக்கு சான்றளிக்க இந்த ஹால்மார்க்கிங் செயல்முறையைப் பின்பற்றுகின்றன. வாடிக்கையாளர் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வாங்கினால், அதற்கு ஹால்மார்க் இருப்பது அவசியம்.
இந்தியாவை பொருத்தவரை ஹால்மார்க் என்ற பொறுப்பை இந்திய தர நிர்ணய கழகத்திடம் இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்த கழகத்தின் அலுவலகம் தான் ஹால்மார்க் என்ற சோதனையை செய்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் விலை உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR