இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்க போகிறது. இதையடுத்து பலர் புது வருடத்திலிருந்து தங்களது வாழ்க்கையை மாற்ற வேண்டும் என முடிவு செய்திருப்பர். அதை அமல்படுத்துவது எப்படி? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு வருடத்தில் வாழ்க்கையையே மாற்ற முடியுமா?


வாழ்வில் நாம் எதை இழந்தாலும் திரும்ப சம்பாதித்துக்கொள்ள முடியும். யாராலும் மீண்டும் திரும்ப பெற முடியாத விஷயம், நேரம் மட்டுமே. வருட தொடக்கத்தில் பலர் New Year Resolution என்று ஒரு உறுதிமொழியை ஏற்பர். உதாரணத்திற்கு, ஒருவர் உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்படியாவது இந்த வருட இறுதிக்குள் குறைத்து விட வேண்டும் என்று அவர்களுள்ளாகவே உறுதி எடுத்துக்கொள்வர். இது, வருட தொடக்கத்தில் மட்டுமன்றி எப்போது வேண்டுமானாலும் அந்த பயணத்தை ஆரம்பிக்கலாம். அப்படி, அனைவருமே அவர்களின் வாழ்க்கையை மாற்ற நினைத்தால் கண்டிப்பாக அதற்கான காரியங்களை நீங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் விஷயங்களை கணக்கெடுங்கள்:


நீங்கள் கனவு காணும் வாழ்கை நிறைவேற்றிக்கொள்ள உங்களது தற்போதைய வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை கணக்கெடுக்க வேண்டும். உங்களது வேலை, உங்களது தனிப்பட்ட வாழ்க்கை, உங்களை சுற்றியுள்ள நண்பர்கள் என அங்குலம் அங்குலமாக பிரித்து தணிக்கை செய்ய வேண்டும். அப்படி கணக்கெடுக்கும் விஷயங்களில் எது உங்களை உயர்த்தி விடுகிறது என்று தெளிவாக தெரியும். அதே போல உங்களை எது பின்னோக்கி இழுக்கிறது என்பதும் உங்களுக்கு தெரிய வரும். இதை உங்களுக்குள் நீங்களே தெளிவு படுத்திக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்ற படிகளும் கண்களுக்கு தெரியும். 


மேலும் படிக்க | தலைக்கு குளிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!


நீங்கள் உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும்:


உங்கள் கனவு வாழ்க்கையை உருவாக்குவதற்கு உங்களது மனநிலையிலும் மாற்றம் தேவை. இதுவரை நீங்கள் எதிர்மறையான எண்ணம் கொண்டவராக இருந்தால், இனி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு கடினமானதாக இருக்கலாம் ஆனால் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மற்றும் உங்களை கட்டுப்படுத்தும் நம்பிக்கைகள் சவால்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்களே சுய சந்தேகத்தை வளர்த்துக்கொள்ள கூடாது. இதை தவிர்த்து, உங்களால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலை மாற்றம் உங்களது கனவு வாழ்க்கையை நனவாக்க உதவும். 


உங்கள் வாழ்க்கைக்கான பார்வையை உருவாக்க வேண்டும்:


உங்கள் கனவு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விரிவாக கற்பனை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒரு வருடத்தில் நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சிறந்த தொழில், உறவுகள், உடல்நலம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சூழல் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துங்கள். இந்த பார்வை உங்களுக்கு உயர்வான வழிக்கு உதவும் ஒளியாக செயல்படுகிறது, தெளிவு மற்றும் திசையை வழங்குகிறது. 


உங்களுக்கான மாற்றங்களுக்காக வேலை செய்யுங்கள்:


தினமும் உங்களுக்கான விஷயங்களை செய்து கொள்ள வேலை செய்யுங்கள். உங்களது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உறுதியளிக்கவும். உங்கள் மனம், உடல் மற்றும் ஆவியை வளர்க்கும் செயல்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். உடற்பயிற்சி செய்வது, புது விஷயத்தை கற்றுக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உங்களது வளர்ச்சி பாதைக்கான வழி உங்களுக்கே தெரியும். 


மேலும் படிக்க | இந்தியாவில் ஒருமுறையாவது நிச்சயம் பார்க்க வேண்டிய ஹில் ஸ்டேஷன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ