Second-Hand Cars Liist: இந்தியாவில் கார் உற்பத்தியாளர்கள், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான கார்களை அறிமுகப் படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று பட்ஜெட் கார் (Budget Car). இது நடுத்தர வர்க்கத்தால் அதிகம் விரும்பப்படும் வகையாகும். இந்த பட்ஜெட் வகை கார்களை தேர்ந்தெடுப்பவர்கள்,  முதலில் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் போன்ற அம்சங்களைத் தான் பார்க்கிறார்கள். மேலும் தங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கு வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்ஜெட் கார்களின் விலை ரூ .3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. தற்போது நாடு இருக்கும் இக்கட்டான கொரோனா (Coronavirus) சூழலில், இவ்வளவு பணத்தை கொடுத்து கார் வாங்கக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. கொரோனா அச்சம், ஊரடங்கு முடக்கம் போன்ற காரணங்களால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்கள் புதிய கார் வாங்க நினைத்தாலும் வாங்க முடியாதா சூழல் உள்ளதால், அவர்களின் தேவைக்கேற்ப நல்ல தரத்தில் உள்ள இரண்டாம் வகை கார்களை வாங்கலாம். 


ALSO READ |  Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?


தற்போது ஏற்பட்டுள்ள பணச் சிக்கலை மனதில் வைத்து, எந்த பிரச்சனையும் இல்லாமலும், 3 லட்சம் ரூபாய் செலவழிக்காமலும் ஒரு நல்ல காரை வீட்டிற்கு எப்படி கொண்டு வர முடியும் என்பதை உங்களுக்கு சொல்லப்போகிறோம்.


நாட்டில்  செகண்ட் ஹேண்ட் கார்கள் (Second-Hand Cars) விற்பனைக்கான சந்தை மிகவும் பெரியது. சில ஆன்லைன் வலைத்தளங்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க உதவுகின்றன. அந்த வலைத்தளங்களில் முக்கியமான ஒன்று OLX.IN ஆகும். இந்த தளத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது. 


இந்த தளத்தின் கார் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள செவ்ரோலேட் அவியோ வாகனம் (Chevrolet Aveo Cars) குறித்து பார்ப்போம். இந்த காரின் விலை 99 ஆயிரம் ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் சலுகைகள் என்ன, அதன் அம்சங்கள் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்வோம்.


இந்த செவ்ரோலெட் அவியோ கார் 2008 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் மாடல் அவியோ யு.வி.ஏ 1.2 (Aveo UVA 1.2) ஆகும். இந்த கார் 46 ஆயிரம் கிலோமீட்டர் வரை பயன்படுத்தப்பட்டு உள்ளது. 


ALSO READ |  Maruti Suzuki-யின் இந்த கார்களில் ரூ.54,000 வரையிலான தள்ளுபடிகள்: பப்மர் சலுகை விவரம்!


OLX இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, கார் ஏசி, ஹீட்டர், பவர் விண்டோ, பவர் ஸ்டீயரிங், சென்ட்ரல் லாக்கிங் போன்ற அம்சங்கள் உள்ளன. கார் 


நீங்கள் இந்த காரை வாங்க விரும்பினால், நீங்கள் நேரடியாக வலைத்தளத்திற்கு சென்று விற்பனையாளரிடம் பேசலாம். மேலும் விற்பனையாளருடன் பேசி, இன்னும் குறைந்த விலையில் இந்த காரையும் வாங்கலாம்.


முக்கிய தகவல் (Important Information): எந்தவொரு இரண்டாவது கை காரையும் வாங்குவதற்கு முன், அதன் ஆவணங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.  அதில் நீங்கள் காரின் சர்வீஸ் குறித்த விவரம், விபத்து வரலாறு மற்றும் காரின் உண்மையான நிலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR