கின்னஸ் சாதனை:நீருக்கடியில் 2.17 நிமிடத்தில், ரூபிக் க்யூபை ஒழுங்குபடுத்தி சாதனை
சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூபிக் கியூப் பயிற்சியாளராக பணிபுரியும் சேகர் பல கின்னஸ் சாதனனைகளை படைத்துள்ளார்.
ரூபிக் க்யூப் விளையாட்டு மூளை வேலைக்கான சிறந்த விளையாட்டு. அதில் ஒரு க்யூபில் ஒழுங்கற்ற நிலையில் வண்ணங்கள் இருக்கும்.அவற்றை ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
சாதாரண சூழ்நிலையிலேயே ரூபிக் க்யூபை ஒழுங்குபடுத்துவது கடினம்.
ஆனால் ஒருவரர் நீருக்கடியில், மூச்சை அடக்கிக் கொண்டு செய்வது உண்மையிலேயே சாதனை தான். "அதிக வேகத்தில் க்யூபிங் செய்யும் அதே நேஎரத்தில், சுவாசத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன்" என க்யூபிக்ஸை தீர்ப்பதில், பல கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த இளையரம் சேகர் WION திலைகாட்சியிடன் கூறினார். சமீபத்திய தனது ஆறாவது கின்னஸ் உலக சாதனையில் சேகர் 6 ரூபிக் க்யூப்ஸை 2 நிமிடங்கள் 17 வினாடிகளில் தீர்த்து வைத்துள்ளார். அதுவுமவர் மூடப்பட்ட கண்ணாடி பெட்டியில் அமர்ந்து கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2 நிமிடங்கள் மற்றும் 17 வினாடிகளில் செய்யப்பட்ட சேகரின் சமீபத்திய சாதனை ஆகஸ்ட் 1, 2020 அன்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர் ஐந்து க்யூப்ஸைப் பயன்படுத்தி 2014 ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார். 2013 முதல் ஒரு தீவிரமாக க்யூப் விளையாட்டை விளையாடி வருகிறார். இதன் நுணுக்கங்களை இணையத்திலிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.
மேலும் படிக்க | வாடிக்கையாளரிடம் 10 ரூபாய் அதிகமாக வசூலித்ததால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூபிக் கியூப் பயிற்சியாளராக பணிபுரியும் சேகர் பல கின்னஸ் சாதனனைகளை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை குழுவிற்கு ஆவணக்களை அனுப்பிய பிறகு பொதுவாக அதை அங்கீகரித்து அறிவிக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். ஆனால், ஆனால், ஆவணங்களை சமர்பித்த ஆறு நாட்களிலேயே இவருக்கு கின்னஸ் சாதனைக்காக்ன சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
“ஆறு க்யூப்ஸை நீருக்கடியில் ஒழுங்கு படுத்துவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இரண்டு நிமிடங்கள் நீருக்கடியில் இருப்பது எளிதானது, ஆனால் நம் மனமும் விரல்களும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்க வேண்டும் என்பது தான் அதன் சவால்" என்று அவர் WION இடம் கூறினார். மேலும் க்யூப் கையை விட்டு நழுவக் கூடாது. அதனால், தண்ணீருக்கடியில் என்னும் போது, இது சவாலான் வேலை என அவர் கூறினார்.
இந்த சாதனையை செய்ய அவர் தொடர்ந்து பிரணாயாம பயிற்சியில் ஈடுபட்டதாகவும், ஒரு வருட காலத்திற்கு நீருக்கடியில் க்யுய்பிக்ஸை தீர்க்க 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இதில் மற்றொரு ஆச்சர்யகரமான விஷயம் என்னவென்றால், இவருக்கு நீச்சல் தெரியாது என்பது தான். இவர் இந்த பயிற்சிக்காக 2019 ஆம் ஆண்டில் ஒரு தண்ணீர் தொட்டியை இதற்காக அமைத்தார்,