நாளை துவங்குகிறது சென்னை சர்வதேச திரைப்பட விழா!
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா நாளை (டிசம்பர் 14) முதல் 21-ஆம் நாள் வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படு உள்ளது.

இந்த விழாவினில் 84 உலக சினிமாக்கள், 11 இந்திய பனோரமா, 12 தமிழ் சினிமா உள்பட 100-க்கும் மேற்பட்ட சினிமாக்கள் திரையிடப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியின் துவக்கவிழா டிசம்பர் 14-ஆம் தேதி மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவானர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த திரைப்பட விழாவினில், இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ்திரைப்படங்களின் பட்டியல்...
அறம்
கடுகு
குரங்கு பொம்மை
மனுசங்கடா
ஒரு கைதியின் கருணை மனு
ஒரு குப்பை கதை
8 தோட்டாக்கள்
விக்ரம் வேதா
மாநகரம்
மகளிர் மட்டும்
தரமணி
துப்பரிவாளன்., என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
For More Details Click Here...