காசோலை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் மக்கள் பலர் உள்ளனர், தற்போது வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கென்று ஒரு புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  அதாவது நிதி அமைச்சகம் காசோலை பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கிலிருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இதுபோன்ற சூழ்நிலைகளில் புதிய கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது போன்ற பல நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறது.  நீண்ட காலமாகவே காசோலை பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது, இதனை கருத்திற்கொண்டு நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது, அந்த கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன? 


காசோலை பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் காசோலை வழங்கிய நபரின் கணக்கில் பணத்தை கழிப்பதற்கு அந்த கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால், அவரது மற்றொரு கணக்கிலிருந்து தொகையை கழிப்பது போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு முன் சில நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. காசோலை பவுன்ஸ் வழக்கை கடனைத் திருப்பிச் செலுத்தாததாகக் கருதி, கடன் நிறுவனங்களுக்கு புகாரளிப்பது, அந்த நபரின் சிபில் மதிப்பெண்ணை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



நிதி அமைச்சகம் இந்த முறையை நடைமுறைப்படுத்தும்போது பணம் செலுத்துபவர் காசோலையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் மற்றும் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை.  மேலும் இதன் வாயிலாக கணக்கில் பணம் இல்லாமல் இருக்கும்போதும் வேண்டுமென்றே காசோலைகளை வழங்குவது தடுக்கப்படும்.  காசோலை பவுன்ஸ் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம், இங்கு காசோலை வழங்கியவருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.  மேலும் காசோலை பவுன்ஸ் ஏற்பட்டால் காசோலை வழங்கிய நபருக்கு வங்கியில் பணம் எடுப்பதற்கு சில நாட்களுக்கு தடையும் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ