கிறிஸ்மஸ் கொண்டாட குறைவான நாட்களே உள்ள நிலையில் அனைத்து நகரங்களிலும் மக்கள் தயாராகி வருகின்றனர்.உலகின் முதலாவது கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் திகதி ரோம் நாட்டில் கிபி 354 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பண்டிகையின் இயல்பும் அழகும் அனைத்து வித மக்களையும் ஈர்ப்பதால் பெரும்பாலானோர் மதவேறுபாடின்றி தம்மையும் அதில் ஈடுபடுத்தி பரிசுகளைப் பரிமாறி இனிப்புக்களை உண்டு மகிழ்கின்றனர்.


கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஸ்டார், தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் கேக் போன்றவை சிறப்பு வாய்ந்தவையாகும்.


தற்போது இந்த பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பிய வீதிகளிலும், வீடுகளிலும், கடைத் தெருக்களிலும் பண்டிகையின் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் நாட்டிலும்  இந்த முறை பின்பற்றப்படும்.


குழந்தை ஏசுவை வரவேற்கும் வகையிலும், கிறிஸ்மஸ் பண்டிகையின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டி தொங்க விடப்படும். இது புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவ வீட்டு வாசலிலும் ஒளிர்ந்து அழகாக காட்சியளிக்கும். இந்த ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் வாங்கி மகிழ்வார்கள்.


அதற்கு முன்பெல்லாம் விண்டர் ஃபெஸ்டிவல் என்றொரு விழா ஐரோப்பிய நாடுகளில் மக்களால் மார்கழி மாத இறுதியில் கொண்டாடப்பட்டிருக்கிறது. உறைபனி உருகி மரங்கள் இளைதுளிர்க்கும் இளவேனில் காலத்தை வரவேற்பது போல பச்சை மரங்களை வைத்துக் கொண்டாடுவார்களாம். 


அப்போது. அந்த பாரம்பரியமே கிறிஸ்துமஸ் விழாவோடு கலந்து சவுக்கு மரத்தை அலங்கரித்து கண்ணைப்பறிக்கும் வர்ணவிளக்குகள் மாட்டி கிறிஸ்துமஸ் மரமாக வீடுகளில் அலங்கரிப்பார்கலாம். 


அதன் பின்னர், அலங்கரிக்கப்பட்ட அந்த மரத்தின் கீழே குடும்பத்திலுள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரிசுப்பொருட்களை வர்ணக்கடிதாசிகள் கொண்டு சுற்றி வைத்துவிடுவார்கள். மறுநாள் அவற்றையெல்லாம் பெருமகிழ்வுடன் பிரித்துப் பார்ப்பதற்காக சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பர். 


அந்தப் பரிசுப்பொருட்கள் அநேகமாக உணவுகள், உடை, பொம்மைகள் என்று மகிழ்ச்சியோடு உபயோகிக்ககூடியனவாகவும், வீண் ஆடம்பரங்களை தவிர்ப்பனவாகவும் அமைந்திருக்கும்.


அதனை பெற்று கொண்ட நபர்கள் மகிழ்ச்சியடைவர்.