கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக்கின் சுவை அனைவரையும் சுண்டியிழுக்கும். இங்கிலாந்தில் நாட்டில் இந்த கேக்கானது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள அனைவரின் வீடுகளில் ப்ளம் கேக் செய்வார்களாம். செய்யும் போது,அனைவரின் முன்னிலையிலும் கேக் செய்வதற்குரிய் மாவைக் கொட்டி அவர்கள் அனைவரும் சேர்ந்து பிசைவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின்பு, அக்குடும்பத்தின் தலைவி ஒரு வெள்ளியிலான பென்னி நாணயத்தை ரகசியமாக அந்த மாவுடன் கலந்து விடுவார். இறுதியாக உருவாக்கப்பட்ட கேக் ஒரு மறைவிடத்தில் வைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கேக்கை எடுத்து குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறுவர். உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.


கிறிஸ்துமஸ் கேக்கினை பல விதங்களில் தயாரிக்கலாம் தற்போது உதகையில் 100 கிலோ கேக் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் பிராந்தி, விஸ்கி, ஒயின் போன்ற மதுபானங்களும், உலர் திராட்சை, பிஸ்தா, பாதாம், வால்நட்ஸ் மற்றும் பேரிச்சை போன்ற பொருட்கள் கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டது. இந்த விழாவில் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனராம்.


பிளம் கேக்;
இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கலவையுடன் கோதுமை மாவு, முட்டை, வெண்ணெய் ஆகிய வற்றைக் கலந்து அந்தக் கலவையை வேகவைத்து கேக் தயாரித்தனர். இப்படித்தான் ‘பிளம் கேக்’ பிறந்தது. ஓவன் வைத்திருந்த செல்வந்தர்கள் உலர் பழங்களையும் வாசனைத் திரவியங்களையும் கொண்டு கேக் தயாரித்தனர். உலர் பழங்களை சர்க்கரை பாகில் ஊரவைத்தால் அவை நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் என்பதை கண்டறிந்து, அந்த தொழிநுட்பத்தைக் கேக் தயாரிக்கப் பயன் படுத்தினர்.


கி.பி 17-ம் நூற்றாண்டில், கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வரும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் அளித்து மகிழ்ந்தனர். 18-ம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் அன்று மட்டுமல்லாமல், ஈஸ்டர், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கேக் முக்கிய இடம் பிடித்தது.


கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக் தயாரிப்புக்கான கலவைகளை பதனிடும் பணிகள் அணைத்து இடங்களிலும் நடை பெற்று வருகின்றனர்.


சேலத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணிகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கேக் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான முந்திரி பாதாம் பிஸ்தா உள்ளிட்டவற்றை தேன் மற்றும் மதுக்களை கொண்டு பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர் . வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கேக் வகைகள் போன்று நம் நாட்டிலும் தயாரித்து விற்பணை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பதப்படுத்தி செய்யும் கேக் வகைகள் கூடுதல் சுவை கொண்டதாக இருக்கும் என்பதால் முதன் முறையாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தன.


அண்மையில், உதகையிலுள்ள ஜெம் பார்க் ஓட்டலில் பழக்கலவை செய்யும் நிகழ்ச்சி மினி விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் என பல தரப்பினரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரிச்சம் பழம், டியூட்டி ஃப்ரூட்டி, உலர் விதைகளான பாதாம், பிஸ்தா இவற்றுடன் வாசனை திரவியங்களைக் கலந்து பழக்கலவை தயாரிக்கப்பட்டது. இதனுடன் ரம், ஒயின் பழச்சாறு, தேன் உள்ளிட்டவையும் கலக்கப்பட்டன.


கேக் மிக்ஸிங் செரிமனி


இந்த கலவை மர பீப்பாயில் ஒரு மாத காலத்துக்கு வைத்துப் பதப்படுத்தப்படும். அதன் பிறகு, இதனுடன் தேவையான அளவு கோதுமை மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்படும். இந்தக் கேக்கை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்களாம்.


பாரம்பரியமிக்க இந்த பழக்கலவை செய்யும் விழா குறித்து ஜெம் பார்க் ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞர் சுரேந்திரன் நம்மோடு பேசினார். “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னதாகவே ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உதகைக்கு இதை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்கள். இன்றைய நிகழ்ச்சியில் உலர் திராட்சை, அத்தி, செர்ரி பழங்களுடன் முந்திரி, மதுபானம் கலந்து தயாரிக்கப்பட்ட பழக்கலவையைக் கொண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் 120 கிலோ எடையில் கேக் தயாரித்து, அதை இங்கு வருபவர்களுக்கு பகிர்ந்தளிப்போம்” என்றார்.