பருவநிலை மாற்றம்: தக்காளி, பாதாம், காபி விலைகள் உச்சத்தை தொடலாம்!
மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக வரும் காலங்களில் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக வரும் காலங்களில் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பல விவசாயத் துறைகளை பாதிக்கிறது. சூறாவளி, வறட்சி மற்றும் கடுமையான மழை போன்றவை ஏற்படுவதால், பல பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் அபாயகரமான பாதிப்புகள் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளன.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
பருவநிலை மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கம் தக்காளி, பாதாம் மற்றும் காபி போன்ற பயிர்களில் காணப்படுகின்றன. காபி கொட்டை முன்பு போல் பளபளப்பாக இல்லாமல் இருப்பதை நீங்களும் கவனித்திருக்க கூடும். அவற்றில் இருந்து வரும் வாசனை முன்பை விட சற்று குறைவாகவே உள்ளதையும் கவனித்திருக்கலாம். தக்காளி, பாதாம் போன்ற பயிறுக்கும் இதே நிலைதான்.
தக்காளி உற்பத்தி
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6-7 மில்லியன் மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்யும் இத்தாலி, ஐரோப்பாவில் மிகப்பெரிய தக்காளி உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு, வடக்கு இத்தாலியில் ஒப்பந்த முறையில் தயாரிக்கும் பண்ணைகளில் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக உற்பத்தி இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பழங்கள் விளைவதற்கு சிறிது உஷ்ணமான காலநிலை ஏற்ற வகையில் இருந்த நிலையில், இப்போது குளிர்ச்சியாகவும், அதிக மழை பெய்வதாலும், பயிர் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் மாறி வருகிறது.
மேலும் படிக்க | GPay, PhonePe-வை காலி செய்ய திட்டம்போடும் TATA - விரைவில் புதிய UPI செயலி
குறைந்த வெப்பநிலை
மேலும் குறைந்த வெப்பநிலை காரணமாக காய்கள் பழுக்க அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. 2019ல் உற்பத்தி செய்யப்பட்ட அளவில் பாதிக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பல்பொருள் அங்காடிகளில் தக்காளியின் விலை மேலும் உயரும்.
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் விவசாயத் துறை
காலநிலை மாற்றம் தக்காளி உட்பட உலகின் மிக அதிகம் பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் உற்பத்தியை எவ்வாறு பாதித்துள்ளது மற்றும் அவற்றின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் சமீபத்தில் நிகழ்ந்த மிக மோசமான காலநிலை நிகழ்வுகளை CIA ஆய்வு செய்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால், வரும் காலங்களில் நிலைமை மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, உலகிற்கு 2040 வரை கால அவகாசம் உள்ளதாகவும், அதற்கு தேவையான பணிகளை இப்போதே மேற்கொள்ள தொடங்கினால் தான் நல்லது என்றும், இல்லை என்றால், வரும் நாட்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பாதாம் சாகுபடி
தக்காளியைத் தவிர, பாதாம், காபி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவை காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் சில பொருட்களாகும். கலிபோர்னியா உலகின் பாதாம் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. மாநிலத்தின் தொழில்துறை இப்போது $6 பில்லியன் மதிப்புடையது. இருப்பினும், காலநிலை மாற்றத்தினால், சாகுபடியில் பல பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். கலிஃபோர்னியா முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் பண்ணைகளை காப்பாற்ற முடியாமல் கைவிடுகின்றனர்.
சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸிலும் இதே நிலைதான். பிரேசிலில் வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறி வருகிறது. ஆனால் சோயாபீன்கள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் சிறப்பாக வளரும். விவசாயிகள் பலவிதமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சோயாபீன் உற்பத்தியின் அளவை திறம்பட அதிகரிக்க முடிந்தது. இருப்பினும், காலநிலை தொடர்ந்து மோசமடைவதால் பாதிப்பு அதிகமாகலாம். இதன் விளைவாக, 2050 ஆம் ஆண்டில் சோயாபீன் உற்பத்தி 86-92 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR