சனி அமாவாசை 2022: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட, சனி அமாவாசை அன்று, சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும். அந்த நாளில் மற்றொரு அரிய தற்செயல் நிகழ்வும் நடக்கிறது. இந்த நாளில், சனி கிரகம் அதன் சொந்த ராசியான மகரத்தில் இருக்கும். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாலும், இந்த அமாவாசை அன்றும் சனி தனது சொந்த ராசியில் மகர ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், சனியின் ஏழரை நாட்டு சனி மகரம், கும்பம் மற்றும் தனுசு ஆகிய 3 ராசிகளிலும், சனி திசை மிதுனம் மற்றும் துலா ராசி ஆகிய இரண்டிலும் நடக்கிறது. எனவே இந்த ராசிகள் சனி பகவானின் தாகத்தை தவிர்க்க கீழ் கண்ட பரிகாரங்களை செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிபகவானின் அருளைப் பெறவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்:


1. அரச மரத்தில் தெய்வங்களும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்ற ஆன்மீக நம்பிக்கை உள்ளது. எனவே, சனி அமாவாசை தினத்தில் அரச வழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்களின் அருளும், முன்னோர்களின் அருளும் ஒரு சேர கிடைக்கும். அரச மரத்திற்கு நீர் வழங்கி அதை சுற்றி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ந்து உங்கள் கஷ்டங்களும் நீங்கும். உங்களுக்கு ஏழைரை நாட்டு சனி நடக்கிறது என்றால், அதன் பாதிப்பில் இருந்து விடுபடவும் இது உதவும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


2. சனி அமாவாசை நாளில், நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும். மேலும், எண்ணெயில் முகம் பார்த்த பிறகு, அதை தானம் செய்யலாம். சனி பகவான் சனி அமாவாசை நாளில் தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைந்து, ஆசிகளை வழங்குகிறார் என ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.


3. சனி அமாவாசை அன்று, கோவிலிலோ அல்லது திறந்த வெளியிலோ அரச மர கன்றை நடவும். இவ்வாறு செய்வதால் சனிதேவரின் மனம் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.


மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்


4. ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அனுமனை வணங்குவதும் அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, சனி அமாவாசை நாளில், ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம், ஹனுமன் மந்திரத்தையும் உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தின் மூலம், உடல், மன மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ