புதன் பெயர்ச்சி எரிப்பு நிலை: கிரகப் பரிமாற்றங்கள் பிரபஞ்சத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவை, அவை வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவை என்பதால், ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான இடம் உண்டு. கிரகங்களின் இளவலான புதன், இந்த இனிய புத்தாண்டு 2023 ஆம் ஆண்டின் முதல் பெயர்ச்சியாக ஜனவரி மாதம் இரண்டாம் தேதி இடம் பெயர்ந்துள்ளார். தனுசு ராசியில் புதன் கிரகம், ஜனவரி 3ம் தேதியன்று அதிகாலை 2:33 மணிக்கு எரிந்த நிலையில், 13 ஜனவரி 2023 அன்று காலை 5:15 மணிக்கு எரிப்பிலிருந்து வெளியே வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் அனைத்து கிரகங்களையும் எரிக்கிறது, ஆனால் அது ஒருபோதும் மறைவதில்லை. அதேபோல, ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், என்பதால் அவை ஒருபோதும் எரிவதில்லை. சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சூரியனை நெருங்குவதால், அதன் வெப்பத்தில் எரிகின்றன, ஆனால் அவை எரிந்தாலும், இயங்கிக் கொண்டே இருக்கின்றன. சூரியனிடம் இருந்து போதுமான அளவு நகர்ந்ததும், அவை சூரியனின் கட்டுப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.


மேலும் படிக்க |இந்த வார கிரகப் பெயர்ச்சியில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி எது?


சூரியனின் சுற்றுப்பாதையில் இருந்து புதனின் நிலையைப் பார்த்தால், அது பொதுவாக சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் எரிப்பு நிலையில் இருக்கும், எனவே, புதனின் எரியக்கூடிய நிலை மிகவும் பொதுவானதாகக் கருதப்படுகிறது. சூரியன் மற்றும் புதன் இணைவதால் புத்தாதித்ய யோகம் உருவாகிறது.


சந்திரன் தனது அச்சில் சுழன்று சூரியனுக்கு 12 டிகிரி அல்லது சற்று அருகில் வரும்போது எரிகிறது. செவ்வாய் கிரகமானது, சூரியனை 17 டிகிரி அல்லது சற்று நெருக்கமாக நெருங்கும் போது எரிகிறது.


இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களுக்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில், அது 14 டிகிரி இருக்கலாம்.


மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!


புதன் சூரியனுக்கு அருகில் 13 டிகிரி அல்லது சற்று அருகில் வரும்போது எரிப்பை சந்திக்கிறது. புதன் கிரகம் அதன் பிற்போக்கு இயக்கத்தில் இருந்தால், அது 12 டிகிரி கூட எரிகிறது. அதேபோல, வியாழன் கிரகம் சூரியனை 11 டிகிரி அல்லது அதற்கு சற்று அருகில் நெருங்கும் போது எரிகிறது.


சுக்கிரன் சூரியனுக்கு அருகில் 10 டிகிரி அல்லது சற்று அருகில் வரும்போது எரிகிறது. சுக்கிரன் வக்ர கதியில் அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் இயங்கும்போது 8 டிகிரியிலும் எரிப்பு நிலையை சந்திக்கிறது. சனி கிரகமானது, சூரியனின் அருகில் 15 டிகிரியில் வரும்போது எரிகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 2023 மகர சங்கராந்தியில் சூரியப் பெயர்ச்சி! புகழ் மழையில் குளிக்கும் ராசிக்காரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ