சமையல் கேஸ் சிலிண்டரைப் போலவே வணிக சிலிண்டர் விலையும் குறைந்தது! விலை ரூ 1,695
LPG Cylinder Price In Chennai: 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை... வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைப்பு.
புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை... வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைப்பு. சிலிண்டர்கள் விலை ரூ.157 குறைக்கப்பட்ட பிறகு, இன்று முதல் இந்த விலையில் கிடைக்கும்.
ஆகஸ்ட் 30 முதல், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையை மத்திய அரசு 200 ரூபாய் குறைந்துள்ளது. இந்த குறைப்புக்குப் பிறகு, டெல்லியில் 14.2 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1103ல் இருந்து ரூ.903 ஆக குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளன.
செப்டம்பர் 1 முதல், எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிரடியாக குறைத்தன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைந்ததால், விலை ரூ.1522.50 ஆக குறைந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் ரூ.100 குறைக்கப்பட்டது, ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட பிறகு, எந்தவித அதிகரிப்பும் செய்யப்படவில்லை.
புதிய கட்டணங்கள் எப்போது அமலுக்கு வரும்?
19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் ஆகஸ்ட் மாத விலையான 1680 ரூபாயுடன் ஒப்பிடுகையில், இப்போது விலை குறைந்துள்ளது. இனிமேல் அதற்கு 1522.50 ரூபாய் செலுத்தினால் போதும். ஆகஸ்ட் 30 முதல், வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டப் பிறகு, டெல்லியில் 14.2 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1103ல் இருந்து ரூ.903 ஆக குறைந்தது. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் விலைக் குறைப்பினால் அதிகப் பலனைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இப்படி முன்பதிவு செய்தால்... அதிரடி தள்ளுபடி கிடைக்கும்
சிலிண்டர் விலை 703 ரூபாய்
அரசு ஏற்கனவே 200 முதல் 10 கோடி பயனாளிகளுக்கு மானியம் அளித்து வருகிறது. இதன்பின், அவர்கள் பெறும் பலன் சிலிண்டருக்கு ரூ.400 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, புதிய விலை மாற்றத்திற்குப் பிறகு, உஜ்வாலா திட்டத்தின் பயனிகளுக்கு சிலிண்டரில் விலை ரூ.703 செலவாகும்.
புதிய கட்டணம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும்
வணிக எரிவாயு சிலிண்டரின் புதிய விலை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லியில் வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1680ல் இருந்து ரூ.1522.50 ஆக குறைந்தது. அதேபோல், கொல்கத்தாவில் ரூ.1802.50க்கு பதிலாக ரூ.1636 செலுத்த வேண்டும். முன்னதாக இந்த சிலிண்டர் மும்பையில் ரூ.1640.50க்கு கிடைத்தது, ஆனால் இப்போது ரூ.1482 செலுத்த வேண்டும். சென்னையில் விலை ரூ.1852.50ல் இருந்து ரூ.1695 ஆக குறைந்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் மெட்ரோ நகரங்களில் கேஸ் சிலிண்டர் விலை
டெல்லி----ரூ 1522.50
கொல்கத்தா----1636 ரூபாய்
மும்பை----1482 ரூபாய்
சென்னை----1695 ரூபாய்
மேலும் படிக்க | புதிய எல்பிஜி கேஸ் இணைப்பு வேண்டுமா? இந்த ஆவணங்கள் இல்லாமல் பெற முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ