கஞ்சா புகைக்க மாதம் மூன்று லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மருத்துவ ஆராய்ச்சிக்காக கஞ்சா சுவைக்கும் வேலைக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆட்களை தேடிக்கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் கஞ்சா புகைப்பவர்களை பணியமர்த்தி வருகிறது. இதற்காக ஆன்லைனில் விளம்பரங்களும் செய்து வருகிறது.


நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ‘அமெரிக்கன் மரிஜுவானா’ (American Marijuana)  என்ற கஞ்சா ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்சமயம் கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகள் அந்த இதழ் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிக்காக கஞ்சா சுவைக்க விரும்புபவர்களை அந்நிறுவனம் தேடி வருகின்றது.


இந்த வேலைக்காக அந்நிறுவனம் மாதம் ரூ. 2.15 லட்சம் சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளது. தேர்வாகும் நபர்கள் ஒவ்வொரு மாதமும் விதவிதமாக கஞ்சா ரகங்களை சுவைத்து அதுகுறித்த விமர்சனங்களை கூற வேண்டும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. பணிக்கு சேர விரும்பும் நபர்களுக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா சட்டப்பூர்வ அனுமதியுடன் விளைவிக்க வேண்டும் என்பது மட்டும் தான். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும் எனவும், தாங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு நிமிட வீடியோவும் அனுப்ப வேண்டுமாம்.


இது குறித்து அந்த இதழின் முதன்மை ஆசிரியர் கூறும் போது, கஞ்சா ஆராய்ச்சியை 20 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சட்டப்பூர்வமாக்கியுள்ளதால், இந்த நிலை முன்னெப்போதும் இல்லாத அளவு முக்கியமானதாக மாறும் எனவும், கஞ்சா புகைக்கும் வேலைக்கு இதுவரை 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.