ஆணுறை அணிவதால் கொரோனாவை தவிர்க்க முடியுமா?
உலகமெங்கும் உயிர்பலி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களை எடுத்துள்ளது. பல வணிகங்கள் பாழடைந்துள்ளன, எனினும் முகமூடி, சானிட்டைசர் மற்றும் ஆணுறை-க்கான விற்பனை மட்டும் குறையவில்லை.
உலகமெங்கும் உயிர்பலி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களை எடுத்துள்ளது. பல வணிகங்கள் பாழடைந்துள்ளன, எனினும் முகமூடி, சானிட்டைசர் மற்றும் ஆணுறை-க்கான விற்பனை மட்டும் குறையவில்லை.
சீனாவில் செழித்து வளரும் கொரோனா வைரஸைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். இந்த கொடிய வைரஸைத் தவிர்க்க, கை-சுத்திகரிப்பு, முகமூடியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கொரோனாவைத் தவிர்ப்பதற்காக மக்கள் ஆணுறைகளையும் கடுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால்., கொரோனாவிலிருந்து ஆணுறை எவ்வாறு காப்பாற்றப்படும் என்ற கேள்வியே பொதுவாக எழுகிறது...
உண்மையில், மக்கள் கொரோனாவைத் தவிர்க்க தங்கள் கைகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது, பொது பயன்பாட்டு விஷயங்களைத் தொடக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் கதவு கைப்பிடிகள் மற்றும் லிப்ட் பொத்தான்கள் பயன்பாடுகள் போன்றவை முடிந்தவரை மக்கள் குறைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், உலகளவில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. உண்மையில், இதுபோன்ற சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதனிடையே ஒரு ஆணுறை கொரோனா வைரஸை எவ்வாறு தடுக்கும் என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது. ஆணுறையை மக்கள் பயன்படுத்தும்போது அதை கை விரல்களால் அணிந்து பயன்படுத்துகிறார்கள். மக்கள் விரல்களால் ஆணுறைகளை அணியும் போது கைகள் மூலம் தொற்று ஆணுறைக்கு பரவாதா?...
எதுவாக இருந்தாலும் மக்களிடையே தற்போது கொரோனா அச்சம் பலவற்றை விற்று வருகிறது, அந்த வகையில் தற்போது ஆணுறைகளும் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும் கை-துப்புரவு, முகமூடி போன்றவை விரைவில் தீர்ந்துவிடும் அளவிற்கு விற்கப்பட்டு வருகிறது.