கடந்த 10 ஆண்டுகளில் காண்டம் பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 20 - 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது. மேலும் ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிகிறது. 


99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 - 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். 32% பேர் நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்துகின்றனர்.