கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஒரே நாட்டில் 7,000 சிறுமிகள் கர்ப்பமாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, மால், சினிமா தியேட்டர் போன்ற அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஒரு புறம் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன எனக் கூறப்பட்டு வரும் அதே வேளையில், பெண்கள் கருத்தரிப்பதும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 7000 பள்ளி மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக வெளியாகிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கிழக்கு அப்பிரிக்க நாடான மாலவியா நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகள் மூடப்பட்டதில் இருந்து தற்போது வரை 7000 மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், கர்ப்பமான மாணவிகளில் பலர் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


ALSO READ | இதயமே…இதயமே…Corona-வால் நீயும் பாதிக்கப்படலாம்: Germany வெளியிட்ட பகீர் Report!!


இதே போன்று கென்யா நாட்டிலும் குழந்தைகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,52,000 சிறுமிகள் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், பலர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். உலக நாடுகள் பல நவீனமயமாகி கொண்டிருக்கும் சூழலில், ஒரு சில நாடுகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.