ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை குறைக்க இந்தியன் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையை ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: கொரோனா வைரஸ்-ன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் ரயில்வே செவ்வாய்க்கிழமை (மார்ச்-17) ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலை குறைக்க நாட்டின் 250 ரயில் நிலையங்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை ரூ.10 முதல் ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், விவரங்களைப் பகிர்ந்துகொண்ட, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை அதிகரிக்க மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளது என்றார்.


"கூட்டத்தின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் சுமார் 250 நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மும்பை, வதோதரா, அகமதாபாத், ரத்லம், ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 பிரிவுகளில் மேடையில் டிக்கெட் கட்டணத்தை ரூ .50 ஆக மேற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மேலும், இந்த புதிய திட்டம் திங்கள் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.


"பொதுவாக, நாங்கள் பண்டிகைகளின் போது பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை உயர்த்துவோம். ஆனால், இது ஒரு தொற்றுநோயின் போது செய்யப்படுவது முதல் முறையாகும். மேடைகளில் மக்கள் கூட்டம் வருவதைத் தடுக்க இது செய்யப்படுகிறது”என்று மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்தர் பாகர் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக எடுக்கபட்ட தற்காலிக நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.