தொடர்ந்து மூன்று முறை தள்ளிப்போன திருமணம், 4 வது முறை அதிரடி காட்டிய மணமக்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... அதுவும், இந்திய திருமணம்  என்றாலே வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது திருமண நாள் மறக்க முடியாத அற்புதமான நிகழ்வாக அவர்களின் மனதில் பதிந்திருக்கும். இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு இளம்ஜோடியின் திருமணம் 3 முறை தள்ளிப்போன நிலையில் 4வது முறையும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டதால் இந்த ஜோடி அதிரடி முடிவு ஒன்றை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் என்ற பகுடியில் இளம்ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இருதரப்பின் குடும்பத்தினர் முடிவு செய்து தேதியையும் நிர்ணயித்தனர். ஆனால் மூன்று முறை நிர்ணயித்த தேதியில் திருமணம் நடைபெற முடியாத சந்தர்ப்ப சூழல் ஏற்பட்டது. அதேபோல், 4-வது முறையாக குறிக்கப்பட்ட திருமண நாள் நெருங்கியபோது திடீரென மணமகனின் தந்தை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 




எனவே, இந்தமுறையும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த முறை திருமணத்தை தள்ளிப்போட விருப்பமில்லாத காதல் ஜோடி, மணமகனின் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைலேயே மருத்துவ நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த தந்தை முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மருத்துவர்கள், நர்ஸ்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.