இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.  சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் பரிவர்த்தனை செய்து வருகின்றனர், அப்படிப்பட்டவர்கள் சில சமயங்களில் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளுக்கான தவணை தொகையை மறந்துவிடக்கூடும்.  இது கார்டுதாரர்கள் பலருக்கும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனை தான், அப்படி குறிப்பிட்ட தவணை தேதிக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொகை அதிகரிக்கும்.  வேலைப்பளுவிற்கு இடையில் ஒவ்வொரு மாதமும் தவணை தேதியை சரியாக நியாபகத்தில் வைத்துக்கொள்வது என்பது கார்டுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய டாஸ்க்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | E-Shram Card: இ ஷ்ரம் கார்டில் இத்தனை நன்மைகளா? இவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்


இனிமேல் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தவணை தொகை செலுத்த வேண்டிய தேதியை நாம் மறந்துவிட்டால் நமக்கு அபராதம் விதிக்கப்படுமே என நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.  உங்களின் சுமையை குறைக்கவே தற்போது இந்திய ரிசர்வ் வங்கி சூப்பரான வசதியை வழங்கியுள்ளது.  கிரெடிட் கார்டுதாரர்கள் உரிய தேதிக்குள் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் அவர்கள் அந்த தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு அபராதம் எதுவும் செலுத்தாமல் பணத்தை செலுத்தலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கூறியுள்ளது.



இதுகுறித்த அறிவிப்பில் வங்கி கூறுகையில், உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்த மறந்துவிட்டால், காலக்கெடு முடிந்த மூன்று நாட்களுக்குள் தாமதமாக கட்டணம் செலுத்தாமல் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.  மேலும் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கும் பணம் செலுத்த தவறிய மூன்று நாட்களுக்குப் பிறகு அபராதம் விதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.  இந்த மூன்று நாட்கள் கால அவகாசத்திலும் கிரெடிட் கார்டுதாரர் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் அவருக்கு அபராத தொகை விதிக்கப்படும்.  அபராத தொகையை அந்தந்த வங்கிகள் தான் நிர்ணயம் செய்கின்றது மற்றும் அடுத்த பில்லிங் சுழற்சியில் மட்டுமே தான் அபராத தொகை வசூலிக்கப்படும்.


மேலும் படிக்க | 25 வயதிலேயே கோடீஸ்வரராகனுமா? அப்போ LIC ஓட இந்த திட்டம் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ