Bengaluru! Shocking News: ஒரே குடும்பத்தின் 5 பேர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!
9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரு: ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சடலங்கள், உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்றிருக்கும் இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | வேகமாக வந்த பேருந்தில் சிக்கிய இளைஞர், பதபதைக்க வைக்கும் Video
இறந்தவர்களில் 9 மாத குழந்தையும் அடங்கும் என்பது வேதனையை அதிகரிக்கிறது. இந்த துர்சம்பவம் வெளியான பிறகு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர் என்பது சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த திகிலூட்டும் சம்பவம் பெங்களூரு பயதாரஹல்லியில் நிகழ்ந்தது.
வீட்டில், 4 குடும்ப உறுப்பினர்கள் கயிற்றில் தொங்கிய நிலையிலும், 9 வயது குழந்தையின் சடலம் படுக்கையிலும் கிடந்தது. உயிருடன் இருந்த இரண்டரை வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
ALSO READ | அறுவைசிகிச்சை மூலம் தலைமுடியை தங்க முடியாக மாற்றிய பாடகர்
உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன
இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி கூறினார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தகவல்களை தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்.
இந்த கூட்டு மரண சம்பவம் வெள்ளிக்கிழமையன்று தெரிய வந்தது. 51 வயது பாரதி, 34 வயது சிஞ்சனா, 25 வயது மதுசாகர் 31 வயது சிந்துராணி மற்றும் சிந்துராணியின் 9 மாத மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரும் ஒன்றாக இறந்துவிட்டார்கள்..
READ ALSO | லண்டனில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இறந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். குடும்பத் தலைவர் சங்கர் வீட்டிற்கு சென்றபோது, குடும்பத்தின் 5 பேர் இறந்து கிடப்பதைப் பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சங்கர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினருடன் பேச முற்பட்டபோது அவர்களில் யாரும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு நேரில் வந்தபோது, இந்த அதிர்ச்சி மரணங்கள் காத்துக் கொண்டிருந்தன.
இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் ஒன்றாக இறந்திருப்பதால், கொலையா, இல்லை குடும்பத்தில் கடன் தொல்லை ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
ALSO READ | முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR