லண்டனில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி!

லண்டனில் பள்ளி குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 01:38 PM IST
லண்டனில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி! title=

லண்டன் :  உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டி படைத்து வருகிறது. அதன் பரவலை தடுக்க முயற்சிகள் பல நடந்து வருகிறது.அதில் ஒன்றுதான் தடுப்பூசி.பெரியவர்களுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்கள் செலுத்தி வருகின்றனர்.

london

இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரிகள் செய்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து நாட்டின் அரசு வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் கூறுகையில்,  “12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதற்கான தலைமை மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

கொரோனா பரவுவதிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள். பள்ளிகளில் கொரோனா பரவல் குறையும், இதனால் வகுப்பறையில் மாணவர்கள் இருப்பார்கள்" என குறிப்பிட்டார்.இதன்படி குழந்தைகளுக்கு பைசர்/பயோ என்டெக் தடுப்பூசி போடப்படும்.  ஆனால் இப்படி தடுப்பூசி போடுவதற்கு குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் சம்மதத்தை தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

london

இங்கிலாந்தில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ குழந்தைகளுக்கு கோழி இரத்தம் கொடுக்கும் சீன பெற்றோர்: வினோத காரணம் இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News