மாண்டஸ் புயலில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்?
மாண்டஸ் புயல் மட்டுமல்லாமல் எந்த புயல் வந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன.
சென்னைக்கு அருகில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில், மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய வழிமுறைகள் இதோ....
பாதுகாப்பான இடம்
மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், புயல் கரையைக் கடக்கும்போது ஏறத்தாழ 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காற்று வீசும் என்பதால் மரங்கள், கம்பங்கள் சாய்ந்து விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஓடு மற்றும் கூரை விடுகள் இடிபாடுகளுக்குள்ளாகும். பழைய கட்டங்கள் இடிந்து விழுந்துவிடும். இத்தகைய வீடுகளில் இருப்பவர்கள் அரசின் நிவாரண முகாம்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கிக் கொள்ள வேண்டும்.
பயணத்தை தவிர்த்தல்
ஏற்கனவே கூறியதுபோல் புயல் கரையைக் கடக்கும்போது அதிவேகமாக காற்று வீசும். அதனால் அந்த நேரத்தில் நீங்கள் வெளியில் எங்கும் பயணம் செல்லக்கூடாது. மீறிச் சென்றால் உங்கள் மீது மரங்கள் மற்றும் கம்பங்கள் சாய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். கட்டடங்கள் கூட இடிந்து விழும்போது, அந்த விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மின் கம்பங்கள் சாயும்போது, மின்சாரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை கருத்திக் கொண்டு புயல் அடிக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் எங்கும் செல்வதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.
மேலும் படிக்க | Cyclone Mandous Live Updates: மாண்டஸ் புயல் காரைக்கால் அருகே வலுவிழந்தது
மின்சாரம் வேண்டாம்
புயல் கரையைக் கடக்கும்போது வீடுகளில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், விபத்து காரணமாக அதீத மின்சாரம் பாய்ந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது வீட்டில் தவிர்க்க முடியாத விபத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
அவசர உதவி எண்
புயல் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் இருந்தால் அரசின் அவசர உதவி எண்ணை தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் உங்களுக்கு தேவையான உதவியை அந்த அவசர மையத்துக்கு அழைத்து நீங்கள் தெரியப்படுத்தி, பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாண்டஸ் புயல் பாதிப்பின் அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணை அழைத்து, அரசின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ