புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-05-2021


மேஷம்: 
அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் நேரிடும். பெரியவர்களிடத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 


ரிஷபம்:
சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.
 


மிதுனம்:


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். வாக்குவன்மையால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 17 மே, 2021: திங்கட்கிழமை இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்


கடகம்:
நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். 


சிம்மம்: 
நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவிடுவது நன்மையளிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.


கன்னி: 
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும்.


Also Read | கல்விக் கண் திறப்பார் நாமகிரித் தாயார்!!


துலாம்:
கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


விருச்சிகம்:
சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். 


தனுசு:
மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். 


Also Read | பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம்


மகரம்:
கலைப் பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். 


கும்பம்:
ஆவணங்களை கையாளும் போது நிதானம் வேண்டும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். 


மீனம்:
மகான்களின் தரிசனம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தற்பெருமை சார்ந்த செயல்களை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். 


Also Read | ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR