மாணவர்கள் படிப்பில் ஜொலிக்க இந்த துதி கண்டிப்பாக கை கொடுக்கும்: கல்விக் கண் திறப்பார் நாமகிரித் தாயார்!!

நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் சில விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் நம்பிக்கையும் பக்தியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2021, 09:22 AM IST
  • கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கண் போன்றது.
    மாணவர்களுக்கு கணிதத்தில் உள்ள பிரச்சனைகளையும் கடினங்களையும் நாமகிரித் தாயார் தீர்த்து வைக்கிறார்.
    கணித மேதைகளில் ஒருவரான ராமானுஜனின் வாழ்க்கை கணிதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான இசைவைக் குறிக்கிறது.
மாணவர்கள் படிப்பில் ஜொலிக்க இந்த துதி கண்டிப்பாக கை கொடுக்கும்: கல்விக் கண் திறப்பார் நாமகிரித் தாயார்!! title=

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கண் போன்றது. ஒரு மனிதனுக்கு பொருட் செல்வம் இல்லாவிட்டாலும் அவனுக்கு கல்விச் செல்வம் இருந்து விட்டால், அவனது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். 

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கல்வி பாடத்தில் நாட்டம் இருக்கும். சிலருக்கு அறிவியல், சிலருக்கு சமூக அறிவியல், சிலருக்குக் கணிதம் என விருப்பங்கள் மாறுபடலாம். எனினும், அன்று முதல் இன்று வரை பல மாணவர்கள் கண்டு அஞ்சும் ஒரு பாடம் உள்ளது என்றால் அது கணக்கு (Mathematics) பாடம்தான். சிலர் கணக்கு பாடத்தில் எளிதாக அதிக மதிப்பெண்களைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் பல மாணவர்களுக்கு இன்னும் கணக்கு பாடம் என்பது கடினமான ஒரு விஷயமாகத் தான் உள்ளது.

கணக்கிற்கு மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்களுக்குமே பயிற்சி என்பதுதான் சரியான தீர்வாகும். விடா முயற்சி நம்மை அனைத்துத் தடைகளையும் தகர்க்க வைக்கும்.

கணக்கு பாடத்தை நன்றாக புரிந்து கொண்டு பல முறை பயிற்சி எடுப்பதுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தையும் சொன்னால், உங்கள் மதிப்பெண்கள் கணக்கு பாடத்தில் அதிகரிப்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

“ஸ்ரீவித்யா மந்த்ர ரத்ன ப்ரகடித விபவா
ஸ்ரீசுபலா பூர்ண காமா சர்வேஸி ப்ரார்திதா
சகல சுரதநுதா சர்வே சாம்ராஜ்யதாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீவேத கர்பா விதுரது மதீயா
விஷ்வ கல்யாண பூமா
விஷ்வ க்ஷேமாத்ம யோகா
விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்யா”

இது நாமக்கல்லில் (Namakkal) உள்ள ஸ்ரீ நாமகிரித்தாயார் சமேத ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் நாமகிரித் தாயாருக்கான துதியாகும்.

ALSO READ: தேவலோக மரங்கள் எவை? அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?

மாணவர்களுக்கு கணிதத்தில் உள்ள பிரச்சனைகளையும் கடினங்களையும் நாமகிரித் தாயார் தீர்த்து வைக்கிறார். கணிதம் மட்டுமல்லாமல், மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் நாமகிரித் தாயார் பூர்த்தி செய்கிறார். இந்த கோயிலுக்கு வந்து தாயாரின் சன்னிதி முன்னால் நெய் விளக்கேற்றி வேண்டினால், மாணவர்கள் கண்டிப்பாகக் கணக்கில் மிக நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்பது உறுதி.

நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் சில விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் நம்பிக்கையும் பக்தியும்.

சரி, கணிதத்திற்கும் பக்திக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? கண்டிப்பாக உள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

கணிதத்திற்கும் பக்திக்குமான இணைப்பு இன்று ஏற்பட்டது அல்ல. 1880-களின் பிற்பகுதியில் நம் தமிழகத்தில் பிறந்த ஒருவர் அந்த இணைப்பிற்கான எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். அவர்தான் ஸ்ரீநிவாச ராமானுஜன் (Srinivasa Ramanujan). உலகின் மிகப் பெரிய கணித மேதைகளில் ஒருவரான ராமானுஜனின் வாழ்க்கையே கணிதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான இசைவைக் குறிக்கும் காலப்பதிவாக மாறியது.

எளிய வாழ்க்கை, எளிய குமாஸ்தா பணி, ஆனால், கணிதத்தின் மீது தணியாத காதல். முறையான கணித பயிற்சி எடுத்துக்கொள்ளாமலேயே அவர் பல கணித சமன்பாடுகளையும், கணித சூத்திரங்களையும் எழுதி நிரூபித்தார். அவற்றை, அங்கீகாரத்திற்காக இங்கிலாந்தில் உள்ள ஹார்வர்ட் ட்ரினிடி கல்லூரியின் பேராசிரியரான G.H. Hardy-க்கு அனுப்பினார். ஹார்டி மட்டுமல்லாமல் உலகமே ராமானுஜத்தின் கணித கண்டுபிடிப்புகளையும் சிக்கலான பல சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் பார்த்து வியந்தது.

இவை அனைத்திலும் ஒரு ஆன்மீக இணைப்பு இருப்பதாக ராமானுஜன் கூறினார். தன் கனவில் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார் (Namagiri Thayar) வந்து இவை அனைத்தையும் தனக்கு எழுதிக் காட்டி புரிய வைத்ததாகவும், அவற்றின் அடிப்படையிலேயே தன்னால் இப்படிப்பட்ட சிக்கலான பல கணித கோட்பாடுகளை இயற்றவும் கண்டுபிடிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெளிவாகக் கூறினார். தன் கணித அறிவாற்றல் அனைத்துக்கும் அவர் நாமகிரித்தாயாரையே அடிப்படையாக்கினார்.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சாலை வழி: சாலை வழியாக வந்தால், சேலத்திலிருந்து 50 கி.மீ மற்றும் கரூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள நாமக்கல்லில் இக்கோயில் அமைந்துள்ளது. 
ரயில் வழி: ரயிலில் வந்தால், சேலம்-கரூர் ரயில்வே தடத்தில் அமைந்துள்ள நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கோயிலை அடையலாம். 
வான்வழி: சேலம் விமான நிலையம் இக்கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும் (60 கி.மீ).

அந்த கணித மேதைக்கு உதவிய நாமகிரித் தாயார் கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் தன் அருளை வழங்கத் தயாராக உள்ளார். நம்பிக்கையோடு அவரை வணங்கி கணக்கில் உங்கள் விடா முயற்சியைத் தொடர்ந்தால், கண்டிப்பாக 100/100 நிச்சயம். வாழ்த்துக்கள்!!  

ALSO READ: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, வடை மாலை சார்த்துவது ஏன் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News