புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே..


இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம். 


ராசிபலன்  - 28-05-2021


மேஷம்:
உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் மனதில் உண்டாகும். சுரங்கம் தொடர்பான செயல்பாடுகளில் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


ரிஷபம்:
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் செயல்படுவது நல்லது.


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 28 மே, 2021: வைகாசி 14ஆம் நாள்; வெள்ளிக்கிழமை


மிதுனம்:
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பதில் திறமைகள் வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் புதுவிதமான ஆலோசனைகள் கிடைக்கும்.


கடகம்:
இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.
 
சிம்மம்:
கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் படியான செய்திகள் மற்றும் சூழ்நிலைகள் அமையும்.
 
கன்னி:


உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு மற்றும் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.


துலாம்:
கிடைக்கும் சிறு வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். இளைய உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் நற்பெயர் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.


Also Read | சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் 
 
விருச்சகம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சமயோகித பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தனவரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய செயல்களை செய்யும் பொழுது சிந்தித்து முடிவுகளை எடுப்பது நன்மையை அளிக்கும்.


தனுசு:
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல்படுத்த சில தடைகளை தாண்டி செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீங்கி சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.


மகரம்:
தொலைதூர தகவல்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த தொழில் சார்ந்த தடைகள் குறையும். தேவையற்ற பேச்சுக்கள் பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். 


கும்பம்:
தெளிவான சிந்தனையுடனும், தீர்க்கமான முடிவுடனும் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகளும், ஆலோசனைகளும் கிடைக்கும்.


மீனம்:
வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் மதிப்புகளும், வாய்ப்புகளும் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் உண்டாகும்.


Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR