வீட்டில் இருக்கும் எரியாத பல்புகள் மற்றும் பழைய சார்ஜர், பேட்டரிகளை அப்படியே வைத்திருப்போம். அவற்றுக்கு காலாவதி தேதி இருக்காது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அவற்றுக்கு காலவதி தேதி இருக்கிறது. உபயோகமில்லாதபோது அவற்றை வீட்டில் வைத்திருந்தால் உங்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். அதனால், வீட்டில் இருந்து உடனே நீங்கள் தூக்கிய எறியவேண்டிய பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன்


வீட்டில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்களால் ஆபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அவற்றில் இருக்கும் அயன் பேட்டரிகள் திடீரென வெடிக்கக்கூடியவை. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு படுகாயமோ அல்லது உயிருக்கு கூட ஆபத்து நேரிடலாம். இதனால் பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பேட்டரிகள் இருந்தால் அவற்றை உடனடியாக வீட்டில் இருந்து தூக்கி எறிந்துவிடவும். 


மேலும் படிக்க | முடக்கப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பது எப்படி?


ரவுட்டர்கள் 


பழைய ரவுட்டர்களை ஈஸியாக ஹேக் செய்ய முடியும். உங்கள் வீட்டில் ஒரு பழைய ரவுட்டர் உள்ளது என்றால் அது சைபர் க்ரைம்களுக்கான வெளிப்படையான அழைப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். பழைய ரவுட்டர்களால் அதிநவீன ஹேக்கிங் முறைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்க முடியாது. அதுமட்டுமின்றி அதிகபடியாக பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆனது ஷார்ட் சர்க்யூட் மற்றும் தீ விபத்துகள் ஏற்படலாம்.


பழைய பவர் கேபிள்கள் 


பொதுவாகவே பவர் கேபிள்கள் காலப்போக்கில் அதன் இன்சுலேஷன் பண்புகளை (insulation properties) இழக்கும். இதனால், ஷாக் மற்றும் தீ விபத்து  ஏற்படுத்தலாம். எனவே பழைய பவர் கேபிள்களை உடனடியாக அப்புறப்படுத்துவது சிறந்தது. 


பழைய பல்புகள் மற்றும் டியூப்லைட்கள் 


பெரும்பாலானோரின் வீடுகளில் இருக்கும் ஸ்டோர் ரூம்களில் பழைய பல்புகள் மற்றும் டியூப் லைட்களை பார்க்கலாம். அவற்றில் இருக்கும் டங்ஸ்டன் இழைகள், இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. அவை எப்போது வேண்டுமானாலும் உடையலாம்  அல்லது வெடிக்கலாம். இதனால் வீட்டில் இருப்பவர்கள் பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.  


இதேபோல் பழைய சார்ஜர்கள், பழைய இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், ஹார்ட் டிரைவ்கள் ஆகியவற்றையும் நீங்கள் தூக்கி எறிவது சிறந்தது. 


மேலும் படிக்க | ரூ.200-ஐ விட குறைந்த விலையில் செம ஸ்பீட்: ஏர்டெல், ஜியோவுக்கு தலைவலியாய் வந்த திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ