Alert: 70 லட்சம் ஊழியர்களின் தரவு leak ஆனது: இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் ஜாக்கிரதை!!
கசிந்த தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி ஃபிஷிங் அல்லது வேறு வழியில் ஹேக்கர்கள் கார்ட் வைத்திருப்பவர்களை குறிவைக்கலாம்.
70 லட்சம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டின் தரவு ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த தரவு டார்க் வெப்பில் (Dark Web) கசிந்துள்ளது. ஊடக அறிக்கையின்படி, இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ரஜாஹரியாவின் கூற்றுப்படி, கசிந்த தரவுகளில் பயனர் பெயர், தொலைபேசி எண் முதல் ஆண்டு வருவாய் வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன.
கசிந்துள்ள தரவுகளின் விவரம்
கசிந்துள்ள தரவுகளில், மின்னஞ்சல் ஐடி, தனிப்பட்ட தகவல், ஆண்டு வருவாய் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. கசிவு விவரங்களின் அளவு 2GB ஆகும். தரவுகளில், வாடிக்கையாளரிடம் எந்த வகையான வங்கி கணக்கு (Bank Account) உள்ளது மற்றும் மொபைல் எச்சரிக்கை வசதி அதில் இயங்குகிறதா இல்லையா என்பது போன்ற தகவல்களும் உள்ளன.
Dark Web-ல் data கசிந்தது
Dark Web-ல் கசிந்த தரவு 2010 முதல் 2019 வரையிலான தரவாகும். இது ஹேக்கர்களால் பயன்படுத்தப்படலாம் என்ற அபாயம் உள்ளது. கசிந்த தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி ஃபிஷிங் அல்லது வேறு வழியில் ஹேக்கர்கள் கார்ட் வைத்திருப்பவர்களை குறிவைக்கலாம்.
PAN-ம் இதி அடங்கும்
இந்தத் தரவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்கள் கசியவில்லை. வங்கிகள் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் விற்பனை செய்ய ஒப்பந்தம் வைத்திருக்கும் தர்ட் பார்டி சர்வீஸ் ப்ரொவைடர் மூலம் இந்தத் தரவு பெறப்பட்டது என கூறப்பட்டுள்ளது. கசிந்த தரவுகளில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களின் PAN-ம் அடங்கும்.
கசிந்த தரவு சரியானதா இல்லையா
70 லட்சம் பயனர்களின் இந்த கசிந்த தரவு சரியானதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சில பயனர்களின் தரவையும் குறுக்கு சோதனை செய்தார். இதில் பெரும்பாலான தகவல்கள் துல்லியமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ரஜாஹரியாவின் கூற்றுப்படி, இந்த தரவு / இணைப்பை யாரோ டார்க் வெப்பில் விற்று விட்டார்கள். பின்னர் அது பொதுவான பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
இந்த நிறுவனங்களின் பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
டார்க் வெப்பில் கசிந்த தரவு ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), கெல்லாக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மெக்கென்சி & கம்பெனி ஆகியவற்றின் சில ஊழியர்களுக்கு சொந்தமானது.
வருமானம் 75 லட்சம்
இந்த ஊழியர்களின் ஆண்டு வருமானம் ரூ .7 லட்சம் முதல் ரூ .75 லட்சம் வரை இருக்கும் என்று அறிக்கையில் கூறப்படுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR