தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினால் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிரம்பியிருக்கின்றன. கொம்பின் தாளங்கள் எங்கும் நிரம்பியிருக்கின்றன, கும்மி ஆட்டக்காரர்கள்  பக்தியுடன் நடனமாட, குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து அறுவடை பருவத்திற்கு நன்றி செலுத்துகின்றன. ஏஷியன் பெயிண்ட்ஸ் ‘தமிழ்நாட்டிற்கு அர்ப்பணம்’ என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் செழிப்பான கலாச்சாரத்துடன் மனப்பூர்வமான உற்சாகத்துடன் களமிறங்கியிருப்பதால் இந்த வருடத்தின் கொண்டாட்டம் மேலும் விரிவடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


செழிப்பான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்த மாநிலத்தின் மக்கள் மனதில் எதிரொலிக்கும் தனித்துவமான செயல்பாடுகளை இந்த பிராண்ட் கொண்டு வந்திருப்பதால் இந்தப் பண்டிகைகளுக்குச் கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது.


பண்டிகை ஓவியத்திரை: ராயேல் கிளிட்ஸ் சிறப்புப் பதிப்பு


ராயேல் கிளிட்ஸின் சிறப்புப் பண்டிகை பதிப்பை ஏஷியன் பெயிண்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது, அவர்களின் ஆரவாரமான இந்த இண்டீரியர் எமல்ஷன் இந்தப் பருவத்திற்கான பாரம்பரியத்திற்குப் பாலமாக இருக்கும். தமிழ்நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தால் கவரப்பட்டிருக்கும் இந்த பேக்கானது புராதான கோயில்கள், நுண்கலைகள் மற்றும் காலத்தை விஞ்சி நிற்கும் தமிழ் கட்டடக்கலைக்கு மரியாதை செலுத்துகிறது.


வான்வெளிக்கு சட்டகமிடும் அற்புதமான கோபுரங்கள் மற்றும் ஆத்தங்குடி ஓடு வேலைப்பாடுகளால் ஈர்க்கப்பட்ட துடிப்பான வண்ணங்கள் யாவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களின் நுணுக்கமான தங்க வேலைப்பாடுகளை நினைவுபடுத்தும் வடிவத்துடன் வேறுபட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன.  


புத்தம் புதிய அம்சத்துடன் இந்த பேக்கானது இன்-மோல்டு லேபிளிங் முறையில் பேக்கேஜ் செய்யப்பட்டு, ஆக்மெண்டெட் ரியாலிட்டி அம்சத்தையும் கொண்டுள்ளது. பேக்கில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ‘தமிழ்நாட்டிற்கு அர்ப்பணம்’ என்று தலைப்பிட்டுள்ள ஒரு இசை சிம்பொனியுடன் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் வழியாக வாடிக்கையாளர்கள் ஒரு மகிழ்ச்சிகரமான பயணத்தைத் தொடங்கலாம். ஒரு கவர்ச்சியான வீடியோவில் வைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் அனுபவமானது மீனாட்சி கோயில் முதல் தஞ்சாவூர் அரண்மனை வரையிலான தமிழ்நாட்டின் அற்புதற்களைக் காட்டுகிறது.  


மொபைல் ஆர்ட் ஓவியத்திரை: மாநகரப் பேருந்து அலங்காரங்கள்
XXL கலெக்டிவ் உடன் இணைந்து, 22 மாநகரப் பேருந்துகளை ஏஷியன் பெயிண்ட்ஸ் நகரும் ஓவியத் திரைகளாக மாற்றியுள்ளது. ராயேல் கிளிட்ஸின் பண்டிகை பேக்கின் வடிவத்தின் தாக்கத்தினால் பேருந்துகளின் படைப்பாற்றல் மாற்றம் தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவைக் கவர்ந்து, பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்துகொள்ளும் நோக்கம் கொண்டது.



உருமாற்றம் பெற்றுள்ள மாநகரப் பேருந்துகள் தமிழ்நாட்டின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்ற, உயிர்த்துடிப்புள்ள நகரும் ஓவியத் திரைகளாகவிட்டன. பேருந்தின் உட்கூரைகளில் ஆத்தங்குடி ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன, இருக்கைகளும் ஜன்னல்களும் துடிப்பான இழைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதியில் நுணுக்கமான வடிவங்களும், தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டு முற்றிலும் புதிய வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஒரு முழுமையான காட்சிக்கினிய அனுபவத்தை வழங்குகின்றன.




வெளிப்புறங்களில், பரதநாட்டியம், கரகாட்டம், காஞ்சிபுரம் புடவைகள் மற்றும் கோபுரங்களைக் கொண்ட உயிரோட்டமுள்ள படங்கள் தீட்டப்பட்டு, தமிழ்நாட்டின் வளமான கலாச்சார சாராம்சத்தை படம்பிடித்துக் காட்டுகின்றன. மீனாட்சி கோயில் முதல் தஞ்சாவூர் அரண்மனை வரையிலுமான மனம் மயக்கும் காட்சிகள் இந்த மாநிலத்தின் வளமையான பாரம்பரியத்தை அழகாக காட்டுகின்றன. 


பிராட்வே முதல் கிளாம்பாக்கம் வரை செல்லும் இரண்டு 21G பேருந்துகள் முழுமையாக மாற்றப்பட்டு, பயணிகளுக்கு காட்சி விருந்து படைத்துள்ளது.


A1, E18, 7H, 40A, 109, 102X, மற்றும் 23 C உட்பட மீதமுள்ள 20 பேருந்துகள், இந்தச் சிறப்பு பேக்கின் பண்டிகை அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டு, சென்னையை வலம் வருகின்றன. சென்னை நகர பயணிகள் இந்த உயிரோட்டமுள்ள பேருந்து அனுபவத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், பொங்கல் கொண்டாட்டம் முடிந்தவிட்ட பின்னரும் அதனுடைய மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.


தலைவர்களின் வாழ்த்து
இந்த முன்னெடுப்புகள் குறித்து பேசுகையில் ஏஷியன் பெயிண்ட்ஸ் லிமிடெடின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.அமித் சியங்கில், “ஏஷியன் பெயிண்ட்ஸ் வீடுகள், பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடன் பல காலமாக ஒரு பாகமாக இருந்துள்ளது. இந்தச் செழிப்பான கலாச்சாரம்தான் இந்த வருடம் உண்மையிலேயே சிறப்பான ஒன்றை எங்களை செய்ய வைத்துள்ளது, அதுதான் எங்களுடைய பண்டிகை பேக்கான ஏஷியன் பெயிண்ட்ஸ் ராயேல் கிளிட்ஸ் மற்றும் 22 மாநகரப் பேருந்துகள் ஒரு நகரும் ஓவியத் திரைகளாக மாற்றப்பட்டிருப்பது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களுடைய பரிசு, உயிர்துடிப்புமிக்க பன்முக கலாச்சாரம் கொண்ட மக்களின் கொண்டாட்டங்களுடன் கொண்டாட்டத்தை சேர்ப்பது,” என்று கூறியுள்ளார்.


XXL கலெக்டிவின் இணை-நிறுவனர் தனிஷ் தாமஸ், “இந்தத் திட்டம் கலாச்சார வளத்தை வெகுமக்களிடம் கொண்டு செல்லும் ஒரு பெரிய இயக்கத்தின் தொடக்கத்தை குறிக்கிறது, சென்னைக்குள் ஒவ்வொரு பயணமும் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சார கூட்டனுபவத்தை வழங்கக் கூடியது,” என பகிர்ந்துள்ளார். 



மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான டாக்டர். ஆல்பி ஜான் கூறுகையில், “பேருந்துகள் இந்த நகரத்தின் சமூக மற்றும் கலாச்சார பரப்பில் எந்தளவுக்கு முக்கியத்துவமுள்ள பங்காற்றுகின்ற என்பதை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிந்துள்ளது. ஏஷியன் பெயிண்ட்ஸின் கூட்டுறவுடன் இந்த முன்னெடுப்பானது ஒரு வலுவான கலாச்சார மையமாக நமது பேருந்துகளை மாற்றியுள்ளது, தினசரி பயணிகளுக்கு புத்துணர்வளித்து நகர்ப்புற அனுபவத்தை செறிவுபடுத்துகிறது. பொதுமக்களுக்கான வெளிகள் கலாச்சார கொண்டாட்டத்திற்கான மேடைகள் என்பதையும் சென்னையின் கொண்டாட்டம் என்பதையும் குறிக்கின்ற முக்கிய நகர்வாகும்.” 


ஏஷியன் பெயிண்ட்ஸ் ராயேல் கிளிட்ஸின் முதன்மை அம்சங்கள்: சுவர்களை நேர்த்தியாக்குதல்
ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் ஏஷியன் பெயிண்ஸ்ட் ராயேல் கிளிட்ஸ் லக்ஸரி எமல்சன் உங்களுடைய உட்புறச் சுவர்களை அல்ட்ரா ஷீன் ஃபினிஷுடன் அதிநவீன ஓவியத்திரையாக மாற்றுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தனித்துவமாக்கும் முதன்மை அம்சங்கள்:


கறைகளை விரட்டுவது: ஓட்டுவதால் ஏற்படும் கறைகளைத் தடுத்து, உங்களுடைய சுவர்களின் சுத்தமான தோற்றத்தை பராமரிக்கிறது. 


குறைவான VOC ஃபார்முலா: புற்றீனி, உயிர்ம மாறுதல், இனப்பெருக்க நச்சுத்தன்மை இல்லாமல் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமையளிப்பது. 


பசுமை உத்தரவாத சான்று: தீவிரமான சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு உட்பட்டது.


பூஞ்சைக்கு எதிரான கவசம்: பூஞ்சை வளர்வதை எதிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது, நீண்டகாலம் உழைப்பது மற்றும் சுகாதாரமான வாழ்விடத்திற்கு உத்தரவாதமளிப்பது.
ராயேல் டிசைனர் பேலட்: சப்யசாஷி வழங்கும் 35 நேரடி வண்ணங்கள் உங்களுடைய வாழ்விடத்தை அழகியல் தன்மை கொண்டதாக்குகிறது.



சுவர்களுக்கு உங்களுடைய கொண்டாட்டங்களில் ஏஷியன் பெயிண்ட்ஸ் ராயேஸ் கிளிட்ஸை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு ஐஸ்வர்த்தை வழங்குவது மட்டுமல்லாமல் உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்கவும் செய்கிறது. வாழ்பனுவத்தை உயர்த்துவதற்கான அலங்காரம் மற்றும் செயல்திறனின் சரியான கலவை. 


இறுதியாக, ஏஷியன் பெயிண்ட்ஸ் ‘தமிழ்நாட்டிற்கு அர்ப்பணம்’ முன்னெடுப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள துடிப்பான வண்ணங்கள் பாரம்பரியம் மற்றும் புதுமையின் அழகான கலவையாகும். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் ராயேல் கிளிட்ஸின் விழாக்கால பேக்குகளை கண்டறிந்து பண்டிகை காலத்தை மகிழ்ச்சியாக்கிவிட நாங்கள் உங்களை வரவேற்கிறோம், மேலும் இவை நகரத்திற்கு வண்ணம் சேர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரித்தின் வண்ணமயமான தோற்றத்தையும் வழங்குகிறது. பண்டிகைகளை கொண்டாடுங்கள், பாரம்பரியத்தை போற்றிடுங்கள், ஏஷியன் பெயிண்ட்ஸ் ராயேல் கிளிட்ஸ் உங்களுடைய வாழ்க்கையில் கொண்டாடங்களை அளித்திடும் ஒரு தூரிகையாக இருக்கட்டும்.


மேலும் படிக்க | Shankar Mahadevan : கிராமி விருது வென்ற சங்கர் மகாதேவன்! இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த SHAKTI


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ