மெட் காலா 2019: அசத்தலாக காட்சியளித்த பாலிவுட் நடிகை!
நடிகை தீபிகா படுகோனேவின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகை தீபிகா படுகோனேவின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் விருது விழாக்களை போலவே மெட் காலா என்ற பெயரில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் அதிகம் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தங்களது கெட்டப்பையே மாற்றிக்கொண்டு வருவார்கள்.
இந்த வருடமும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் நடிகை தீபிகா படுகோனே பங்கு பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வந்த தீபிகா, தனது உடை அலங்காரத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்து வந்த இளஞ்சிவப்பு ஜாகுவாட் கவுன், முப்பரிமாண எம்ப்ராய்ட்ரியால் அலங்கரிக்கப்பட்டு ஒரு தேவதை போல காட்சியளிக்க செய்தது.