டெல்லியில் இஸ்ரோ விஞ்ஞானி என்று கூறி ஆராய்ச்சி மாணவியை திருமணம் செய்துகொண்ட போலி நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தான் இஸ்ரோ விஞ்ஞானி என்று கூறி ஆராய்ச்சி மாணவியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


துவாரகா பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவர் தான் ஒரு விஞ்ஞானி என்றும், இஸ்ரோவில் பணியாற்றுவதாகவும் கூறி அடையாள அட்டையைக் காண்பித்து பெண் வீட்டாரை ஏமாற்றியுள்ளார். மே மாதம் திருமணம் முடிந்த நிலையில், மனைவியிடம் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO-வில் வேலைபார்ப்பதாகக் கூறி வந்துள்ளார் ஜிதேந்திரா. 


பின்னர், நாசாவில் சேரப்போவதாகவும் விண்வெளி வீரராக பயிற்சி பெற அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அந்த நபர் கூறியதால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதாகக் கூறிவிட்டு சென்ற கணவர் எங்கிருக்கிறார் என மனைவி ஆராய்ந்த போது, அவர் ஹரியானா மாநிலம் குர்கானில் தங்கியிருப்பது தெரிய வந்தது.


தனது தந்திரம் அம்பலமானதால் தனது தாய் தந்தையருடன் ஜிதேந்திரா தலைமறைவானார். மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.