2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை டென்னிஸ் முக்வஜே, நாடியா முராத் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.



#டெனிஸ்_முக்வே காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் பெண்களுக்கான, மருத்துவர் ஆகும். போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். ஒரே நாளில்  18 அறுவை சிகிச்சை வரை செய்து நற்பணி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடன் தாம் பார்க்கும் வைத்தியத்திற்கு பணம் வாங்குவதை எதிர்ப்பவர். போர்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர்.  


பெண் போராளி #நாடியா_முராத் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர். குர்து மனித உரிமை போராளியாக செயல்பட்டு வருகிறார். IS அமைப்பினர் ஈராக்கில் ஏராளமான மக்களை கொன்று குவித்து வந்தபோது சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வந்தார்.