துவைக்க போட்ட மகனின் அழுக்கு துணியில் கட்டுக்கட்டாக இருந்த ஆணுறை... அதிர்ந்து போன அம்மா.. அடுத்து என்ன நடந்தது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், துவைக்க அழுக்கு துணியை போட்ட இளைஞர் ஒருவர், பர்ஸில் வைத்திருந்த ஆணுறைகளை (Condom) எடுக்க மறந்து, அதனை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயிருக்கின்றனர். இதற்கு அவர்கள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாக (Viral) பரவி வருகிறது.


ஹர்ஷ் மிட்டல் (Harsh Mittal) என்ற இளைஞர் ஒருவர், தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு நேர்ந்த தர்மசங்கடமான நிலை குறித்து எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழுக்கு துணிகளை அம்மா வாஷிங்மிஷனில் போட்டு துவைத்திருக்கிறார். அதனை காய வைக்கும் போது, என பேன்ட்டில் இருந்த பர்ஸை (wallet) எடுத்து பார்த்திருக்கிறார். அதனை திறந்து பார்த்த போது, அதில் நான் வைத்திருந்த 3 நிறுவனங்களில் 5 ஆணுறைகளை பார்த்துவிட்டார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போய், என் தந்தையிடமும் கூறிவிட்டார்.



வழக்கம் போல் வீடு திரும்பிதும் என்னை, எனது பெற்றோர் வித்தியாமாக பார்த்தனர். அம்மா என்னிடம்கூறினார், உனது துணியை  துவைக்கும் போது உன் பர்ஸில் இருந்த சிலவற்றை நான் கண்டேன் என கூறினார். மாடியில் அப்பா இருக்கிறார், அவரை போய் பாரு என கூறினார். மாட்டிக் கொண்டேமே என விழித்தபடி மேலே சென்ற என்னை அப்பா கடுமையாக திட்டினார். திருமணம் வேண்டாம் என இதற்காக தான் கூறினாயா என கடுமையாக திட்டினார்.


மேலும், பர்ஸில் இருந்த ஆணுறைகளை எடுத்து வந்து மாடியில் வெயிலில் எனது தந்தை காய வைத்திருந்தார். என் போன்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இந்த நிகழ்வால் நான் மனம் நொந்து போனேன்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR