உலக  இளசுகளின் கவனத்தை ஈர்த்த 'Hands' bikinis என்னும் புதுவகை ஆடை..!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆள் பாதி ஆடை பாதி... என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். காரணம் ஒரு மனிதரை நம் எடைபோடும் விசயத்தில் அவரது குணாதிசயத்தை காட்டிலும் அவரது ஆடை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காலாசார மாற்றங்களுக்கு ஏற்றவாறு மக்களின் ஆடை கலாசாரமும் படிப்படியாக மாறிவருகிறது. அந்தவகையில் தற்போது காலம், கலாச்சார மாற்றத்திற்கேற்ப புதுவகை பிகினி ஆடை வடிவமைப்பு ஒன்று பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


பெண்கள் கடற்கரைகளில் பிகினி ஆடையில் வலம் வருவதை நம்மில் சிலர் சினிமாக்களிலும், இன்னும் சிலர் அதிஷ்டம் இருந்தால் நேரிலும் கூட பார்த்திருக்கலாம். பிகினி ஆடைகளில் பல டிசைன்கள் மார்கெட்டில் வலம்வந்து கொண்டுதான் உள்ளது. எவ்வளவு டிசைன்களில் பிகினிக்கள் வந்தாலும் வித்தியாசமான டிசைன்களை தேடித்தான் பெண்கள் ஓடி கொண்டு இருகின்றனர். 


அந்த வகையில் தற்போது புதிதாக மார்கெட்டிற்கு வந்திருக்ககூடிய பிகினி என்பது மனித கை விடிவிலான பிரா மார்கெட்டிற்கு வந்துள்ளது. இதை அணிந்து சென்றால் கட்டாயம் அங்கு இருப்பவர்கள் அத்தனை பேரின் கவனமும் அதை அணிந்து செல்பவர்களின் மீது தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 




அந்த பிகினி உடையின் விலையை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றிவிடும். ஒரு பிகினி செட் 260 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த பிகினி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தங்களுக்கு பிடிதமான ஆடைகளை உடுத்துவதில் மனிதர்களுக்கு எவ்வளவு அளவுகடந்த இன்பம்.