LPG Price Discount: சமையல் எரிவாயு LPG கேஸ் சிலிண்டர்களின் விலை பிப்ரவரி 2021 இல் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் LPG கேஸ் சிலிண்டரின் விலை ஒரு LPG சிலிண்டருக்கு ரூ .769 (14.2 கிலோ) ஆக உள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் LPG விலையை ரூ .25 உயர்த்துவதாக அறிவித்ததை அடுத்து இந்த விலை உயர்வு செங்குத்தாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் பிப்ரவரி 14 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலையை ரூ .50 உயர்த்தின. இருப்பினும், LPG சிலிண்டர் பயனர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இந்தேன் ரீஃபிலுக்கு அமேசான் பே மூலம் கட்டணம் செலுத்தினால் ரூ .50 கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.


இருப்பினும், இந்த சலுகை முதல் முறை செய்யப்படும் பரிவர்த்தனைக்கு மட்டுமே அளிக்கப்படும். ஆனால், பிப்ரவரி 14 ஆம் தேதி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்த ரூ .50 அதிகரிப்பை ஈடு செய்ய இந்த சலுகை பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


IOCL தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டிலிருந்து, இந்தேன் (Indane) எரிவாயு நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணத்தைப் பற்றி அறிவித்து, "அமேசான் பே மூலம் #இந்தேன் ரீஃபில்லுக்கு புக் செய்து கட்டணம் செலுத்தினால், உங்கள் முதல் பரிவர்த்தனையில் 50 ரூபாய் காஷ்பேக் பெறலாம்” என தெரிவித்தது.


IOCL-ன் ட்வீட் உங்கள் பார்வைக்கு:



ALSO READ: Gas இணைப்புடன் உங்க ஆதார் எண்ணை இணைக்க ஒரே ஒரு SMS போதும்..!


அமேசான் பே மூலம் கேஸ் முன்பதிவு செய்து கேஷ்பேக் பெறும் முறை:


-Amazon Pay மூலம் இந்தேன் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய பயனர்கள் முதலில் அமேசான் பேவின் ‘Payment Option’-க்கு செல்ல வேண்டும்.


-பின்னர் உங்கள் LPG எரிவாயு சிலிண்டர் வழங்குநரைத் தேர்ந்தெடுத்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது LPG நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்.


- LPG கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் அமேசான் பே வாலெட்டில் ரூ .50 கேஷ்பேக் தானாக வந்துவிடும்.


தொலைபேசி அழைப்பு, எஸ்.எம்.எஸ் மூலம் இந்தேன் எரிவாயு முன்பதிவு


IOCL நாடு முழுவதற்கும் 7718955555 என்ற ஒற்றை தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணில் அழைத்து அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் ஆன்லைனில் இந்தேன் கேஸ் முன்பதிவு செய்யலாம். இந்த எண்ணின் மூலம் LPG சிலிண்டர் ரீஃபில்லை முன்பதிவு செய்த பின்னர் பயனர் LPG கட்டணத்தை செலுத்தலாம்.


ஆகவே, LPG சிலிண்டருக்காக முன்பதிவு செய்து, இன்னும் சிலிண்டரை பெறாதவர்கள் Amazon Pay செயலியை தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, சிலிண்டர் டெலிவரி நேரத்தில் இதன் மூலம் கட்டணம் செலுத்தி தங்கள் முதல் Amazon Pay இந்தேன் கெஸ் பரிமாற்றத்தில் 50 ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.


ALSO READ: LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றம் - முழு விவரம் இதோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR