தீபாவளி 2023: எண்ணெய் சுட வைத்து குளிக்க வேண்டும் ஏன்? நல்ல நேரம் தெரிஞ்சுக்கோங்க
தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட இருக்கும் நிலையில், அன்றைய நாளில் எண்ணெய் குளியல் எப்போது எடுக்க வேண்டும்? சூடான எண்ணெயில் குளிக்க வேண்டும் ஏன் என்பதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் மிக பிரபலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான நாளை கொண்டாடப்படுகிறது. வெகு விமரிசையாக கொண்டாடுவதற்காக நாடெங்கும் இருக்கும் மக்கள் புத்தாடை, இனிப்புகள் மற்றும் பட்டாசு ஆகியவை வாங்க கடைவீதிகளில் குவிந்துள்ளனர். கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் இந்த தீப ஒளி திருநாளில் மக்கள் கடைபிடிக்கும் சில முக்கியமான சடங்குகளும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் காலையில் எழுந்து எண்ணெய் குளியல் இடுவது. அதுவும் சுட வைத்து தான் எண்ணெய் குளியல் போடுவார்கள். அதற்கான நேரம், எண்ணெய் குளியலுக்கான சாஸ்திரம் சொல்வது என்ன?, சுட வைத்து ஏன் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க | தீபாவளியன்று ‘இந்த’ பரிசுகளை மட்டும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்!
எண்ணெய் குளியலுக்கான நல்ல நேரம்
தீபாவளி திருநாளான நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் குளியல் எடுத்துவிடவேண்டும். இதனை கங்கா ஸ்நானம் என்று சொல்வதுண்டு.
எண்ணெய் குளியல் ஏன் எடுக்க வேண்டும்?
பொதுவாக அதிகாலையில் எண்ணெய் குளியல் எடுக்கும் பழக்கம் நம்மிடையே இல்லை என்றாலும், தீபாவளி நாளில் மட்டும் அதிகாலையில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கம். 'நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி அன்று உஷத் காலத்தில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்’ என்கிறது சாஸ்திரம். 'தைலே லக்ஷ்மீ ஜலே கங்கா' என்பது புராண வாக்கு. அதாவது, தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி உட்கார்ந்திருக்கிறாள். நீரில் கங்கை இருக்கிறாள். இருவரும் சேர்ந்து எண்ணெய் குளியல் எடுக்கும் தீபாவளி திருநாளில் சகல பாவம் மற்றும் கஷ்டங்களையும் போக்கி ஐஸ்வர்யங்களை தருவார்கள் என்பது ஐதீகம்.
சூடான எண்ணெய் குளியல் எடுப்பது ஏன்?
தீபாவளி திருநாளில் எண்ணெய் குளியல் எடுப்பதற்கு முன் நல்லெண்ணையை வானலியில் ஊற்றி சூடாக்க வேண்டும். அத்துடன் வெள்ளை பூண்டு, மிளகும் சேர்ந்துக் கொள்ளலாம். பின்னர் எண்ணெய் வெதுவெதுப்பான பிறகு உடலில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் காத்திருந்து குளிக்க வேண்டும். இப்படியான எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
குளிர்காலத்தில் சரும வறட்சி நீங்கி புத்துணர்ச்சி பெறவும், ரத்த ஓட்டம் சீராகவும் இந்த எண்ணெய் குளியல் உதவுகிறது. மேலும், எண்ணெய் குளியல் உடல் நலன்களை மட்டுமல்ல, மன தளர்வையும் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ