லட்சுமி குபேரன் பூஜை மிகவும் சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி  எந்திரத்தைப்  பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள்  தீரும். செல்வம் பெருகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பூஜையின்‌ மூலம்‌ செல்வத்திற்கு அதிபதியான குபேரனின்‌ அருள்‌ மட்டுமல்லாமல்‌ மகாலட்சுமியின்‌ அருளையும்‌ பெற முடியும்‌. தீபாவளி (Diwali) திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை.


ALSO READ | நிம்மதியான தூக்கம் இல்லையா? அப்போ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர்தான்!


ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். குபேர பூஜையைத் தொடங்குமுன் எப்போதும் போல் விநாயகரை முதலில் பூஜிக்க வேண்டும். தொடர்ந்து மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து வைத்தோ, ஸ்ரீசூக்த பாராயணத்துடன் தூபதீபம் போன்ற பதினாறு உபசரனைகள் செய்து பூஜிக்கவேண்டும்.


கலச பூஜையை அடுத்து நவகிரகங்களை பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்ய வேண்டும். தியான ஸ்லோகம் சொல்லி தியானித்து, பூஜையைத் தொடங்க வேண்டும்.


குபேரனின் தியான சுலோகம்
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயுகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம்


குபேர மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜபித்து வணங்கவேண்டும்.
குபேர மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய!
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா!!


தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌
அதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணி வரை
காலை 09.13 மணி முதல்‌ 10.43 மணி வரை
பிற்பகல்‌ 01.13 மணி முதல்‌ 01.28 மணி வரை
மாலை 06.00 மணி முதல்‌ 07.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல்‌ 09.00 மணி வரை


ALSO READ | நிதி தடுமாற்றத்தில் இருந்து தப்பிக்க? இந்த விஷயங்களைச் செய்யுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR