தனியாக வெளியூரில் குடிபெயர போகிறீர்களா? அப்போ இதையெல்லாம் மறக்காதீங்க..!
Life Hacks: வெளியூரில் தனியாக தங்க இருப்போர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை படித்து பயன்பெறவும்.
பல வருடங்கள் உங்கள் பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு, தற்போது வேலை அல்லது வேறு காரணமாக தனியாக வெளியூருக்கு சென்று தங்க இருக்கிறீர்களா? இதை கண்டிப்பாக படியுங்கள்.
தனியாக செல்லும் பிள்ளைகள்..
இந்தியாவில், வீட்டை விட்டு வெளியேறு தனியாக ஒரு ஊரில் தங்கியிருந்து படிப்பது, வேலைக்கு செல்வது என்பது கொஞ்சம் சிரமம்தான். அதிலும் பெண்களுக்கு “திருமணமாகி எங்கு வேணாலும் போ..” என்ற டைலாக்தான் பரிசாக கிடைக்கும். இவையனைத்தையும் கடந்து வேலை அல்லது படிப்பு விஷயமாக வெளியூரில் தங்க இருப்பவர்கள், சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: காத்திருக்கும் 3 நல்ல செய்திகள்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்
1. ஒரு நாளை குறித்துக்கொள்ளுங்கள்:
நீங்கள் வேறு வீட்டிற்கு எந்த நாளில் செல்லப்போகிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதை குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் சொல்ல வேண்டியது முக்கியம். சோம்பேறித்தனத்தில் வேறு இடத்திற்கான வேலைகளில் நீங்கள் இறங்கவில்லையென்றாலும் உங்கள் அன்புக்குறியோர் உங்களை துரிதமாக செயல்பட அறிவுறுத்துவர்.
2. நிதி நிலைமையை ஆராயுங்கள்:
தனியாக வெளியூரில் வேலைக்கு செல்கையில் உங்கள் பணத்தேவைகளையும் நீங்களே பூர்த்தி செய்வது போன்ற சூழ்நிலைகள் அமையும். அதற்கு, உங்கள் வருமானத்தை வைத்து நிதி நிலைமையை நீங்களே ஆராய வேண்டியது கட்டாயம். வேறு வீட்டிற்கு செல்லும் நீங்கள், அந்த வீட்டிற்கு தேவையான இரண்டு மாத வாடகை உங்களிடம் கையிருப்பில் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குகையில், உங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு ப்ளான் செய்யுங்கள்.
3. நிலையான வருமானம் தேவை:
வேறு ஊருக்கு செல்லும் முன், உங்கள் வருமானம் நிலையானதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். நீங்கள் பணியமர இருக்கும் நிறுவனமே தங்கும் இடத்தை ஏற்பாடு செய்கிறார்களா என்று பாருங்கள். அப்படியில்லை எனில், அலுவலகத்திற்கு அருகிலேயே கம்மியான வாடகைக்கு நல்ல வீடாக பார்த்து தேடுங்கள்.
4.பட்ஜெட்டை உருவாக்குங்கள்:
வேறு இடத்திற்கு குடிபெயரும் முன்னர், உங்கள் பெற்றோரிடம் தங்கியிருக்கும் போதே பட்ஜெட்டை உருவாக்குங்கள். இது, உங்களது வருமானத்தை பொறுத்ததாக இருக்க வேண்டும். மாதமாதம் வாடகை கொடுத்தது போக கையில் எவ்வளவு நிக்கும் என்பதை கணக்கு போடுங்கள். இதில், உங்கள் சாப்பிட்டிற்கு இவ்வளவு, வீட்டுத்தேவைகளுக்கு இவ்வளவு என ஒதுக்கி வைய்யுங்கள். இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.
5. ரூம்-மேட்டை தேடுங்கள்:
உங்கள் வீட்டின் வாடகையை ஷேர் செய்யவும், வீட்டு செலவுகளை பிரித்து கொள்ளவும் உங்களுடன் தங்குவதற்கு நல்ல ஆளை தேடுங்கள். இது, உங்களுக்கு செலவை சமாளிக்க உதவும்.
6. எப்படி வீடு தேடுவது?
உதாரணத்திற்கு நீங்கள் வேறு ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறீர்கள் என்றால், இணையத்திலேயே வீடு தேடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தயும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அந்த தளத்தில் உள்ளவற்றை நன்கு ஆராய்ந்து நண்பர்கள்-தெரிந்தவர்களிடம் இதுகுறித்து நம்பலாமா நம்பக்கூடாதா என நன்கு கேட்டறிந்த பின்னர், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும். யாரேனும் தெரிந்தவர்கள் நீங்கள் போக்கப்போகும் ஊரில் இருந்தால் அவர்களது உதவியையும் நாடலாம்.
மேலும் படிக்க | கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா? ஆச்சரியப்படுத்தும் அதிசய உண்மை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ