கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா? ஆச்சரியப்படுத்தும் அதிசய உண்மை..!

Precognitive Dreams: எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்துகள் முன்கூட்டியே கனவில் தெரியுமா? வாங்க பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2023, 04:36 PM IST
  • கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா?
  • வரவிருக்கும் ஆபத்துகள் கனவில் தெரியுமா?
  • அனைத்திற்கும் இங்கே விடை இருக்கிறது.
கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா? ஆச்சரியப்படுத்தும் அதிசய உண்மை..! title=

ஒரு இரவு, நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பீர்கள். அப்போது திடீரென்று, எங்கோ மேலிருந்து விழுவது போலவும் யாரோ கழுத்தை பிடித்து நெரிப்பது போலவோ கெட்ட கனவுகள் வரும். இவை எப்போதும் நமது ஆழ்மனதுடன் தொடர்புடையவையாகத்தான் இருக்கும். ஆனால், சில கனவுகள் அப்படியல்ல, அது நமது எதிர்காலத்துடன் தொடர்புடையவையாக கூட இருக்கலாம். அதிலும், சில நல்ல கனவுகள் சட்டென மறந்துவிடும். மறக்க முயற்சிக்கும் கனவுகளோ, அப்படியே மனதில் தங்கி விடும். சரி, எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கனவுகளால் முன்கூட்டியே கனிக்க முடியுமா? வாங்க பார்க்கலாம். 

எச்சரிக்கை தரும் கனவுகள்:

நமது எதிர்காலத்தை முன் கூட்டியே கனிக்கும் திறன் கனவுகளுக்கு உள்ளதா என்று கேட்டால், அதை நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களை பிரபல ஆராய்ச்சியாளர்கள் எடுத்து நீட்டுகின்றனர். ஆனால், இதுகுறித்த விவாதங்கள் இன்னும் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் இருந்து வேறுபடும் சில நிகழ்வுகளும் உண்டு. உதாரணத்திற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் இறந்து போவது போல கனவு கண்டாராம். அந்த கனவில், ஏதோ ஒரு பிணத்தை சுற்றி எல்லோரும் அழுது கொண்டிருப்பது போலவும் யாரோ ஜனாதிபதியை கொலை செய்து விட்டதாக அந்த கனவில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனராம். இந்த கனவு தனக்கு மிகவும் பயத்தை கொடுட்ததாக ஆப்ரகாம் லிங்கன் தனது நண்பரிடம் கூறியிருக்கிறார். இந்த கனவை அடுத்து சில நாட்களுக்கு பின்னர், லிங்கன் ஒருவரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். இது தற்செயலாக நடந்ததா அல்லது அவருக்கு இந்த கனவு முன்கூட்டியே அவரது இறப்பை கூறியதா என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாத ஒன்று. 

மேலும் படிக்க | உங்களின் துணை மீது சந்தேகம் அதிகரிக்கிறதா... இந்த 10 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

அறிவியல் ரீதியான தொடர்பு என்ன? 

கனவு குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் சில அதிசய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வில், நமக்கு வரும் கனவுகள் நமது நினைவுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. ஒரு சில ஆய்வுகளில், நமக்கு வரும் கெட்ட கனவுகள் நம் வாழ்வில் உண்மையாகவே சந்திக்க இருக்கும் சில பல இன்னல்களை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும் என கூறப்படுகிறது. 

கனவுகள் எதிர்காலத்தை கனிக்குமா?

எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விஷயங்கள், நம் கனவில் வருவதற்கு Precognitive Dreaming என்று பெயர். இது, ஒருவகையான எச்சரிக்கையை நமக்கு அளிக்குமாம். இது, நமது நினைவாற்றலுடன் தொடர்பு உடையது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தேர்வை எதிர்கொள்வது போலவும் அதில் நிறைய கேள்விகளுக்கு விடை தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது போலவும் கனவு வந்தால், நீங்கள் நிஜ வாழ்வில் தேர்வுக்கு தேவையான ஒரு விஷயத்தை படிக்க வில்லை என்று அர்த்தம். அது முக்கியமானது என தெரிந்தே அந்த பகுதியினை படிக்காமல் விட்டிருப்பீர்கள். பிறகு அந்த கேள்வி தேர்வில் வந்தால் என்ன செய்வது என யோசிப்பீர்கள். இதன் வெளிபாடுதான் எதிர்காலத்தை குறிக்கும் கனவுகளாக நமக்கு தூக்கத்தில் வருகின்றன.

வருங்காலம் குறித்த கனவுகள் வருவதற்கு காரணம் என்ன? 

சிலர், தங்களுக்கு வரும் சாதாரண கனவுகளை தங்களுக்கு ஏற்ற கனவுகளாக மாற்றிக்கொள்கின்றனர். தெளிவற்ற முறையில் வரும் கனவுகளைக்கூட தங்களுக்கு ஏற்ற கனவுகளாக மாற்றி, அதன் மூலம் எதிர்காலத்தை கனிக்க முயற்சிப்பர். 

அமானுஷ்ய நம்பிக்கை:

ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் இவை மட்டுமன்றி அமானுஷ்யத்தை தூண்டும் வகையில் இன்னும் என்னென்ன வகைகள் உள்ளனவோ அதை நம்புபவர்களுக்கு இது போன்ற Pre Cognitive கனவுகள் வரும். அமானுஷ்யத்தில் நம்பிக்கை உடையோர், உண்மையான உலகில் இருக்கும் விஷயங்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பர். இதனாலேயே அவர்களுக்கு இதுபோன்ற கனவுகள் அதிகம் வரும். 

தற்செயலாகவும் இருக்கலாம்..

சிலருக்கு ஒரு கனவு வந்த பின்னர் அது நடைமுறை வாழ்விலும் நடப்பது தற்செயலான நிகழ்வாகவும் இருக்கலாம்.

மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதலே கைகூடாது..! யார் அந்த ராசியே இல்லாத ராசிக்காரர்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News