காதலிக்கும் அனைவருக்குமே தங்களது உறவு நல்லவிதமாக செல்ல வேண்டும் என்கிற ஆசை தான் இருக்கும், ஆனால் எல்லா உறவும் நன்றாக சென்றுவிடுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.  உறவில் இருக்கும் இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள், தேவைகள் இருக்கும் அதனை இருவரும் புரிந்துகொண்ட சென்றால் தான் அவர்களது உறவு நல்லவிதமாக செல்லும்.  தங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுவது உறவை வலுப்படுத்தும், ஆனால் சிலரது உறவிலோ பேசுவதே பிரச்னையாகிவிடும் இறுதியில் அந்த உறவு முறிந்தேவிடும்.  நம்முடைய துணைக்கு மெசேஜ் செய்வது யாருக்கு தான் பிடிக்காது, ஆனால் நாம் என்ன மெசேஜ் செய்கிறோம் எந்த நேரத்தில் மெசேஜ் செய்கிறோம் என்பது முக்கியமானது.  இறந்தவரின் வீட்டில் அமர்ந்துகொன்டு சிரித்து பேசமுடியுமா, அதுபோல தான் நாம் சூழ்நிலைகளை புரிந்துகொண்ட நம் துணையுடன் உரையாடுவதும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Credit Card: இலவச விமானப் பயணம் செய்ய ரெடியா? விமான டிக்கெட்டுகள் இலவசம்


1) முதன்முறையாக நம்மை காதலிப்பவருடன் டேட்டிங் செல்வது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அழகான தருணம், அதன்பின்னர் பலரும் ஒருவருக்கொருவர் மெசேஜ் செய்ய ஆசைப்படுவார்கள்.  ஆனால் நீங்கள் பேசத்தொடங்கும் ஒவ்வொரு சமயத்திலும் மெசேஜ் செய்வது ஒருவித எரிச்சலுணர்வை ஏற்படுத்தும்.


2) உங்கள் துணை கோவமாக இருக்கும்போது அவருக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது, அப்படி உங்கள் துணை கோவமாக இருக்கும் சமயத்தில் நீங்கள் அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்வதால் உங்கள் உறவு தோல்வியில் முடியும் சூழ்நிலை உருவாகலாம்.  முடிந்தவரை கோவமாக இருப்பவரை கொஞ்சம் அமைதிப்படுத்தும்படியாக பேசுவது உங்கள் உறவை வலுப்படுத்தும்.


3) நமக்கு பிடித்தவருடன் பேசுவது என்றால் மனதிற்குள் கோடிக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மனசுக்குள் பறக்கும், ஆனால் அவர்களுடைய சூழ்நிலையை புரிந்துகொண்ட நாம் பேசினால் அந்த பட்டாம்பூச்சி அப்படியே சிறகடித்து பறக்கும் இல்லையென்றால் சிறகொடிந்து விழுந்துவிடும்.  உங்கள் துணை சில சம்யங்களில் பிஸியாக இருக்கலாம், அவரது சூழ்நிலையை நீங்கள் புரிந்து சுதந்திரமாக இருக்கவிட வேண்டும், அப்படி இல்லாமல் பிசியாக இருக்கும் நேரத்தில் தொடர்ந்து பேச சொல்வது உறவின் முறிவுக்கு வழிவகுக்கும்.


4) பொதுவாக காதலிக்கும் ஒவ்வொருவரும் அவர்களது துணையை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வது வழக்கமானது தான், சிலரால் அடிக்கடி அவர்களது துணையை பார்க்க முடியாது, பேசமுடியாது இதனாலேயே பலரும் தங்களது துணையை மிஸ் செய்வார்கள்.  அதற்காக எப்போதும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் என்று அவரிடம் தெரிவித்துக்கொண்டு இருக்கக்கூடாது, வேறு எதைப்பற்றியும் பேசாமல் இதையே உங்கள் துணையிடம் நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் அது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | உங்கள் துணையிடம் இந்த விசயத்தை மட்டும் பண்ணிடாதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ