எடை குறைப்பிற்காக பலர் பல்வேறு விஷயங்களை செய்வதுண்டு. இதனுடன் சேர்த்து, தூங்குவதற்கு முன்னர் சில யோகாசனங்களை செய்தால் அது நிறைய பலன் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகாசனங்களும் உடல் எடை குறைப்பும்..


அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்க யோகா ஒரு சக்திவாய்ந்த  கருவியாக இருக்கிறது. மென்மையான யோகாசனங்களால் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மனதையும் சாந்தப்படுத்துமாம். இது, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. யோகாசங்கள், தூக்கத்திற்கு உடலை தயார் செய்யவும் உதவுகின்றன. நல்ல தூக்கத்திற்கு உதவும் யோகாசனங்கள், உடல் எடையை குறைப்பதற்கும் நன்றாக உதவுகிறது. இதை தூங்குவதற்கு முன்னால் செய்தால், உடல் எடையை சமநிலைப்படுத்தவும் உடல் எடை குறையவும் உதவுமாம். அவை என்னென்ன யோகாசனங்கள் தெரியுமா? இங்கு பார்ப்போம். 


பாலாசனம்:


>கால்விரல்களை ஒன்றாகவும், முழங்கால்களை இடுப்பு அகலமாகவும் வைத்துக்கொண்டு உடற்பயிற்சி பாயில் முட்டி போட்டு இருக்கவும்.


>உங்கள் முழங்கால்களுக்கு இடையில் உங்கள் உடற்பகுதியைக் வைத்து, கைகளை முன்னோக்கி கொண்டு செல்லவும். இதையடுத்து உங்கள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கவும். 


>உங்கள் நெற்றியை மேட்டின் மீது வைத்து ஆழமாக சுவாசிக்கவும், உங்கள் முதுகெலும்பை நீட்டி, தளர்வையும் ஊக்குவிக்கவும்.


அதோ முக்கா ஸ்வாசனா:


>உங்கள் கைகளை முட்டிக்கு நேராக வைத்து குனியவும். உங்கள் இடுப்பு மேல் நோக்கி உயர்த்தவும். 


>கால்களை நேராக வைத்து முட்டியை கொஞ்சமாக மடிக்கவும். இதனால் உங்களது முதுகு விரிவடையும். 


>கைகளை மேட்டின் மீது விரித்து வைத்து உங்கள் உடலை நீட்டமாக வைக்கவும். 


மேலும் படிக்க | Pongal 2024: டயட்டில் இருப்பவர்கள் இப்படி பொங்கல் செய்து சாப்பிடுங்கள், வேற லெவலில் இருக்கும்



விபரீத காரணி:


>ஒரு சுவருக்கு எதிராக பக்கவாட்டாக உட்கார்ந்து, உங்கள் கால்களை சுவருடன் நீட்டவும்.


>உங்கள் கால்களை மேலே ஸ்விங் செய்து, உங்கள் பின்புறமாக படுக்கவும். இதை சுவருக்கு எதிராக வைக்கவும்.


>உங்கள் கைகளை பக்கவாட்டில் தளர்த்தி ஆழமான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.


சுப்த பத்தா கோனாசனா:


>உங்கள் பின்புறமாக படுத்து, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கால்களை ஒன்றாக இணைக்கவும்.


>உங்கள் முழங்கால்களை பக்கவாட்டில் இறக்கி வைத்து உங்கள் கைகளை வயிற்றில் அல்லது உங்கள் இரு பக்கங்களில் வைக்கவும்.


>அந்த போஸில் ஆழமாக சுவாசித்து இடுப்புகளைத் திறந்து, தளர்த்தவும். 


பாசிமோட்டனாசனா:


>உங்கள் கால்களை உங்களுக்கு முன்னால் நீட்டி உட்கார்ந்து கொள்ளவும்.


>உங்கள் இடுப்பை கைகளில் கட்டிக்கொண்டு, உங்கள் கால்விரல்கள் அல்லது தாடைகளைத் தொடும் வகையில் உங்கள் உடலினை நீட்டவும்.


>உங்கள் முதுகை நேராக வைத்து, உங்கள் முதுகெலும்பை நீட்டி, தொடை எலும்புகளை நீட்டவும்.


சப்த மத்ஸ்யேந்த்ராசனம்:


>உங்கள் முதுகில் படுத்து, உங்கள் முழங்கால்களை வளைத்து, ஒரு பக்கமாக படுக்கவும். 


>உங்கள் கைகளை டி வடிவில் நீட்டி, உங்கள் தலையை எதிர் திசையில் திருப்பவும்.


>உங்கள் முதுகை மென்மையாக திருப்புங்கள். 


சவாசனா:


>உங்கள் முதுகுப்புறமாக படுத்து, கால்களை நீட்டி, கைகளை பக்கவாட்டில் வைத்து, உள்ளங்கைகள் மேலே பார்க்கவும்.


>உங்கள் கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள், இது உங்கள் உடலை முழுமையாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.


>அதே போஸில் சில நிமிடங்கள் இருந்து, பின்னர் மெதுவாக எழுந்து கொள்ளவும். 


மேலும் படிக்க | நெய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? அதிகரிக்குமா? இதோ பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ