கடந்த சில ஆண்டுகளாக மிக இளம் வயதிலேயே பலர் நாள்பட்ட நோய் பாதிப்புகளால் அவதிப்படுகிறோம். இது வந்த பிறகு என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதற்கு பல வழிமுறைகள் கொட்டிக்கிடக்கிறதே தவிர, அவற்றை வராமல் தடுப்பதற்கான விளக்கங்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் ரத்த அழுத்த நோய் பாதிப்புகளை பலர் நாள்பட்ட நோய் பாதிப்புகள் என குறிப்பிடுவதுண்டு. இப்படிப்பட்ட நாள்பட்ட நோய் பாதிப்புகளை சரிசெய்ய, சில பயிற்சிகள் உண்டு. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடைப்பயிற்சி:


நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நாம் நோய் பாதிப்புகள் வராமல் தடுத்து கொள்வது மட்டுமன்றி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் செய்யலாம். தினசரி 8,200 முதல் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சுகர், ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகளை குறைக்கும் என சமீபத்திய மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நாள்பட்ட நோய் பாதிப்புகள் வருவது, உடல் பருமனால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, தினமும் உடற்பயிர்சி செய்வதால் உடல் எடையையும் குறைத்து இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம். இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது, இரப்பையில் ஏற்படும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். 


உடல் எடையை குறைப்பது:


அதிக உடல் எடையை குறைப்பது சுகர் லெவலை குறைக்க உதவும். இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், தன் உடலில் 7% உடல் எடையை குறைத்தால் கண்டிப்பாக சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதை, உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் செய்யலாம். இதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை கடைப்பிடிக்க வேண்டும். 


மேலும் படிக்க | அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர இந்த மஞ்ச கலர் விதை ஒன்று போதும்


சில நிமிடங்கள் நடந்தாலும் போதும்..


2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 15 நிமிடங்கள் மட்டுமன்றி சில நிமிடங்கள் நடந்தால் கூட, உடலில் பல நன்மைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சாப்பிட்ட பிறகு மட்டுமன்றி அதிக நேரம் உட்கார்ந்து இருந்தாலும், அதிக நேர ஓய்விற்கு பின்னரும் செய்யலாம். 


வேகமாக நடப்பது..


தினமும் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்கிறோம் என்பதை விட, எவ்வளவு வேகமாக நடக்கிறோம் கவனிக்க வேண்டும். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசன் கடந்த ஆண்ட் ஒரு மருத்துவ ஆய்வினை வெளியிட்டது. அதில், பெண்கள் ஒரு நிமிடத்திற்கு 87 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்றும், ஆண்கள் ஒரு நிமிடத்திற்கு 100 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | மதியம் சாப்பிட்ட பிறகு மறந்தும் செய்த கூடாத தவறுகள்!


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ