நாம் மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று உங்களுக்கு தெரியுமா? -அப்போ இதை படிங்க!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பலரும் இந்த பலமொழியை சொல்லி கேள்விபட்டிருப்போம். நாம் யார்கிட்ட எப்படி பேசுவது என்று தெரியாமல் சிலர் யாரை கண்டாலும் வளவள என்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.


மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இறைவன் கொடுத்த அற்புதமான பரிசுதான் சிரிப்பும், பேசுவதும். பேசுவதற்கான உரிமை இந்த உலகத்தில் அனைவருக்கும் உண்டு. ஆனால், நாம் யார்கிட்ட எப்படி பேசுகின்றோம் என்பதில் தான் இருக்கிறது எல்லாம். நாம் எல்லார்கிட்டயும் ஒரே மாதரிதான் பேசியிருப்போம். அனாலும் நம்மை திட்டுவார்கள். அது ஏன் என்று என்னைக்காவது நீங்கள் யோசிப்பது உண்ட?. 


ஹ்ம்ம்.... அப்படி சிந்தித்திருந்தால் தான் நாம் எங்கயு போயிருப்போமே!. நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நாம் எப்படி பேசவேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.   


பேசும் முறைகள்:-


தாயிடம் நாம் அன்பாக பேச வேண்டும்! 


தந்தையுடன் நாம் பண்பாக பேச வேண்டும்! 


ஆசிரியரிடம் நாம் அடக்கமாக பேச வேண்டும்! 


துணைவியுடன் நாம் உண்மையாக பேச வேண்டும்! 


சகோதரனிடம் நாம் அளவாக பேச வேண்டும்! 


சகோதரியிடம் நாம் பாசத்தோடு பேச வேண்டும்! 


குழந்தைகளிடம் நாம் ஆர்வத்தோடு பேச வேண்டும்! 


உறவினர்களிடம் நாம் பரிவோடு பேச வேண்டும்! 


நண்பர்களிடம் நாம் உரிமையோடு பேச வேண்டும்! 


அதிகாரியிடம் நாம் பணிவோடு பேச வேண்டும்! 


வியாபாரியிடம் நாம் கறாராக பேச வேண்டும்! 


வாடிக்கையாளரிடம் நாம் நேர்மையாக பேச வேண்டும்! 


தொழிலாளரிடம் நாம் மனிதநேயத்தோடு பேச வேண்டும்! 


இறைவனிடம் நாம் மெளனமாக பேச வேண்டும்!