How to watch Netflix Movies Free: உலகின் மிகப்பெரிய சந்தா ஸ்ட்ரீமிங் சேவையான நெட்ஃபிளிக்ஸ் சந்தா கட்டணத்தை (Netflix subscription) மற்ற டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney Hotstar) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட பிற ஸ்ட்ரீமிங் சேவையுடன் ஒப்பிட்டால் விலை அதிகம். இருப்பினும், நெட்ஃபிளிக்ஸ் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்களை வழங்குகிறது. நெட்ஃபிளிக்ஸ் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் சில திரைப்படங்கள் அல்லது பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் முதல் அத்தியாயங்களைப் பார்க்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Netflix-ன் இந்த விருப்பம் தற்போது Android ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைகாட்சியில் பார்க்க முடியும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இதன் பொருள் நீங்கள் iOS சாதனங்கள் மூலம் பார்க்க முடியாது. அதாவது ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட்கள்.


ALSO READ |  உங்கள் Netflix கணக்கில் இருந்து ஒரு கருவியை நீக்குவது எவ்வாறு? 5 எளிய வழிகள்!


இலவச உள்ளடக்கத்தைக் காண, நீங்கள் netflix.com/in/watch-free என்ற தளத்திற்கு சென்று Join Now கிளிக் செய்து உள்ளே நுழைந்து உங்களுக்காக படத்தை நீங்கள் பார்க்கலாம் அல்லது இந்த இணைப்பு கிளிக் செய்தவுடன், உங்கள் முன்னால் தோற்றும் பக்கத்தில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள படங்களை கிளிக் செய்தும் இலவசமாக பார்க்கலாம். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உள்ளடக்கத்தைக் காண உலாவியில் வலைத்தள இணைப்பை உள்ளிட வேண்டும்.


இங்கு பட்டியிடப்பட்டுள்ள திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் இலவச சேவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் நெட்ஃபிக்ஸ் திட்டங்கள் (Netflix Plans in India)
இந்தியாவில் தற்போது நெட்ஃபிக்ஸ் நான்கு மாதாந்திர திட்டங்கள் உள்ளன. ரூ 199 திட்டம் ஒற்றை திரையில் மட்டும் காண முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் மொபைலில் மட்டுமே அணுக முடியும். ரூ .499 திட்டத்தில், கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவியில் (smart TV) எஸ்டி (SD) மற்றும் எச்டி (HD) உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.


ALSO READ |  COVID-19 முடக்க காலத்தில் உங்கள் பொழுதை கழிக்க சிறந்த OTT எவை...


ரூ. 649 திட்டத்தில், நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் (Devices) பயன்படுத்தலாம். அதே நேரத்தில் ரூ .799 திட்டத்தில், ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.