வலி அல்லது தூக்கப் பிரச்சினைகள் போன்ற நரம்பு மண்டலக் கோளாறுகளுக்காக ஐந்து ஆண்டுகள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (எம்.எஸ்) அடையாளம் காணப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மைலீனை தாக்கும்.இது மின் சமிக்ஞைகளை விரைவாகப் பரப்புவதற்கு உதவும் கொழுப்புப் பொருள் - இது மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கிறது, பார்வை பிரச்சினைகள், தசை பலவீனம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சிரமம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.


"இதுபோன்ற 'எச்சரிக்கை அறிகுறிகள் அல்சைமர் நோய் மற்றும் பார்கின்சன் நோய்க்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் எம்.எஸ்ஸுக்கும் இதேபோன்ற முறை ஆராயப்படவில்லை" என்று கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவின் தலைமை ஆராய்ச்சியாளர் ஹெலன் ட்ரெம்லெட் கூறியுள்ளார். டேட்டா மைனிங் எனப்படும் தரவு சுரங்க நுட்பங்களைப் பயன்படுத்தி நாம் இப்போது ஆழமாக ஆராய வேண்டும். பாலினம், வயது அல்லது எம்.எஸ்ஸின் வகையால் புலன்களால் உணரத்தக்க வடிவங்கள் இறுதியில் உருவாகின்றனவா என்பதை நாங்கள் காண விரும்புகிறோம், "என்று ட்ரெம்லெட் மேலும் கூறினார்.


மல்டிபிள் ஸ்களீரோசிஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த குழு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உள்ள 14,000 பேரின் சுகாதார பதிவுகளை ஆய்வு செய்து, நோய் இல்லாத 67,000 பேரின் சுகாதார பதிவுகளுடன் ஒப்பிடுகிறது. ஃபைப்ரோமியால்ஜியா - தசைக்கூட்டு வலி பரவலாக சம்பந்தப்பட்ட ஒரு நிலை, பின்னாட்களில் எம் எஸ் கண்டறியப்பட்டவர்களை விட கண்டறியப்படாதவர் கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.


பின்னாட்களில் இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மலம் தொடர்பான சிக்கல்கள் இரட்டிப்பாக இருந்தன . ஒற்றைத் தலைவலி மற்றும் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் இருமுனயப்பிறழ்வு எனப்படக்கூடிய உளச்சிக்கல் உள்ளிட்ட குழுவில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.


கூடுதலாக, இந்த நோய்களின் அதிக விகிதங்கள் தசைக்கூட்டு கோளாறுகள், நரம்பு மண்டல கோளாறுகள் மற்றும் மரபணு-சிறுநீர் பாதைக் கோளாறுகள், அத்துடன் ஆண்டி டிப்ரெஷன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆகியவற்றிற்கான மருந்துகளின் பயன்பாட்டுடன் ஒத்துப்போகின்றன.


முன்னரே நோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்க இந்த கண்டுபிடிப்புக்கள் மருத்துவர்களுக்கு உதவக்கூடும், இதனால் மூளை மற்றும் முதுகெலும்புக்கு ஏற்படும் சேதம் குறையும்.


மொழியாக்கம் - சரிதா சேகர்