புதுடெல்லி: பிரபஞ்சத்த்தில் ஏற்பட்ட பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூன்யமானபோது,   உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, உலகம் உய்ய அன்னை பார்வதி நான்கு ஜாமங்களிலும் ஐயன் சிவனை பிரார்த்தித்த நாள் சிவராத்திரி, சிவனின் ராத்திரி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிவராத்தியன்று கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன? 
மஹா சிவராத்திரி வழிபாட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிரசாதம் செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும். 
எண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.  


சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி, வில்வ இலைகளைக் கொண்டு லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாம்.  


Also Read | சிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்?


நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் படிக்கலாம், கேட்கலாம். சிவஸ்துதிகளை உச்சரித்து ஐயனை வணங்கலாம். இரவு கண்விழித்து சிவபூஜை செய்யவேண்டும். ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.


சிவராத்திரியின் போது இரவு நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
சிவகரந்தை எனும் இலை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.


சிவராத்தியன்று இரவு செய்யும் நான்கு ஜாம பூஜைகளில் முதல்ஜாம பூஜை, படைக்கும் கடவுளான பிரம்மா சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். சிவாலயங்களில் முதல் கால பூஜையின்போது ரிக் வேத பாராயணம் செய்வார்கள். முதல் கால சிவராத்திரி பூஜை, பிறவிப் பிணிகளில் இருந்து முக்தி தரும்.  


Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?


சிவராத்திரியன்று இரவு செய்யப்பட்டும் இரண்டாவது ஜாம பூஜையை செய்வது காக்கும் கடவுள் விஷ்ணு. இரண்டாவது கால பூஜையின்போது யஜுர்வேத பாராயணம் செய்வது சிறாப்பு. 


மூன்றாம் ஜாம பூஜை, சக்தியின் வடிவமான அம்பாள், ஐயனை பூஜிப்பதால் விஷேசமானது. மூன்றாம் ஜாமம் லிங்கோத்பவ காலம் ஆகும். இந்த சமயத்தில் தான் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் முயற்சி செய்த காலம். 


முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காம் ஜாம பூஜையின்போது சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த பூஜையின்போது அதர்வண வேதப் பாராயணம் செய்வது சிறப்பு.  


Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா? 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR